கலை, இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பாற்றியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டு தோறும் குடியரசு தினத்தை ஒட்டி இந்த விருதுப் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், 2026ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் 131 பேர் இடம் பெற்றனர். 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவர்களில் 66 பேருக்கு டில்லி ராஷ்டிரபதி பவனில் இன்று, ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி சிறப்பித்தார்.