திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளை தனது யூ டியூப்பில் சவுக்கு சங்கர், வெளியிட்டு வந்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. அடுத்தடுத்து கைதானார். நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தபோதும், நிபந்தனைகளை மீறியதால், அவரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஆந்திராவில் இருந்த சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சவுக்கு சங்கருக்கு ஜாமின் கிடைத்துள்ளது. குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது. புழல் சிறையில் இருந்து ரிலீஸ் ஆன சங்கரை, அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். அப்போது பேசிய அவர், முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்னார்.