மக்களின் நம்பிக்கை தலைவர் மோடி: அமீர்கான் புகழாரம்

மக்களின் நம்பிக்கை தலைவர் மோடி: அமீர்கான் புகழாரம்
Advertisement
எழுத்து அளவு

பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் "மன் கி பாத்" (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். இதன் 100-வது நிகழ்ச்சி, வருகிற 30-ந் தேதி ஒலிபரப்பாகிறது. இதையொட்டி, "மன் கி பாத்-100" என்ற ஒருநாள் தேசிய மாநாடு நேற்று டில்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இதனை தொடங்கி வைத்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், இந்தி நடிகர் அமீர்கான், நடிகை ரவீணா டாண்டன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 100 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமீர்கான் பேசியதாவது: "மன் கி பாத்" நிகழ்ச்சி, ஒரு தலைவர், பொதுமக்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கான முக்கியமான சாதனம். பிரதமர் மோடியை மக்கள் நம்புகிறார்கள். மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்துகிறார். ஒரு தலைவர், தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை மக்களிடம் தெரிவித்து, அவர்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் முக்கியம். இது எந்த தலைவருக்கும் அடிப்படை தேவை. இந்நிகழ்ச்சி, மக்கள் இயக்கமாக நடக்கிறது. மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை ரவீணா டாண்டன் பேசியதாவது: "மன் கி பாத்" மூலம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் பிரதமர் தொட்டு வருகிறார். கண்டுகொள்ளப்படாத நாயகர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறார். கட்டுப்பாடுகளை உடைத்து பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கிறார்கள். என்றார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

பாலிவுட் செய்திகள்

நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங்

நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங்

ஹிந்தியில் அடுத்தடுத்து வெளியான துரந்தர் திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு


காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்

காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் சமீபத்தில் இந்திய எல்​லை பாது​காப்​பு படை​ அழைப்​பின் பேரில், காஷ்மீரில் இருக்கும் எல்​லை பகு​திக்கு சென்றார். அங்கு ராணுவ வீரர்களை


30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி

30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனாட்சி சேஷாத்திரி. 1983ல் ‛பெயிண்டர் பாபு படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு ‛ஹீரோ, தாமினி


அமிதாப் பச்சன் இனியும் இதை தொடரலாமா ? விவாதத்தை துவங்கிய நெட்டிசன்கள்

அமிதாப் பச்சன் இனியும் இதை தொடரலாமா ? விவாதத்தை துவங்கிய நெட்டிசன்கள்

பாலிவுட்டில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அமிதாப் பச்சன், தற்போதும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.. அதுமட்டுமல்ல, தனது இந்த உயரத்திற்கு


நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார்

நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார்

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல் படுவோரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் பத்ம விருதுகளை மத்திய

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map