சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

லாவண்யாவின் ஸ்(வரம்)

லாவண்யாவின் ஸ்(வரம்)
Advertisement
எழுத்து அளவு


படித்ததோ பல் மருத்துவம். பிடித்ததோ பாடல்கள் பாடுவது... ஒன்றல்ல... இரண்டல்ல... நுாறு படங்களுக்கும் மேல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பின்னணி பாடல்களை பாடியிருக்கிறார். பிறரும் இசைஞானம் பெற யுடியூப் சேனல், ஆன்லைன் மூலம் லைட் மியூசிக் குறித்து பயிற்சியளித்து வருகிறார். இப்பெருமைகளுக்கு சொந்தக்காரர் பின்னணி பாடகர், பல் அறுவை சிகிச்சை நிபுணர், இசை பயிற்றுனர், நடுவர் என பல பரிமாணங்கள் கொண்டவர் டாக்டர் லாவண்யா.

இவரிடம் இசை பயின்ற இளையதலைமுறையினர் இன்று பல்வேறு ேஷாக்கள், போட்டிகளில் பரிசுகளை தட்டி செல்கின்றனர். சினிமா பாடல்களுக்கான ஸ்வரம் எழுதி தன் சேனலில் வெளியிடுகிறார்.

இனி அவர்...

பிறந்தது, படித்தது, வளர்ந்தது சென்னையில். பல் மருத்துவம் முடித்து அறுவை சிகிச்சை நிபுணராக பணி துவங்கினேன். மூன்று வயதிலேயே பாட்டு வகுப்புகளில் பெற்றோர் சேர்த்து விட்டதால் பாட்டும், இசையும் என்னை பற்றிக்கொண்டன. பிளஸ் 2 படிக்கிற காலத்தில் ஏ.வி.ரமணன் நடத்திய சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிகளில் பல முறை வெற்றி பெற்றிருக்கிறேன். கச்சேரிகளில் பாட வாய்ப்பு ஏற்பட்டது. பல் மருத்துவம் முடித்து சிகிச்சையையும் அளிக்க துவங்கினேன். ஆனாலும் மனம் இசையிலேயே லயித்தது. பாடல் பாடி ஆல்பமாக வெளியிட்டேன்.

விளம்பர படங்களுக்கு பாடினேன். விஜய் நடித்த தமிழன் படத்தில் இமான் இசையில் பாட வாய்ப்பு வந்தது. விஜய் இன்ட்ரோ பாடல் பாடினேன். லால்லா ேஹா பார்ட்டி என்ற அந்த பாடல் ஹிட்டானது. துள்ளுவதோ இளமை, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் உள்ளிட்ட நுாறு படங்களில் பாடியிருக்கிறேன். இளையராஜா, ரமேஷ் விநாயகம், இமான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், பரத்வாஜ் இசையில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பாடியிருக்கிறேன். இளைய ராஜா திருவாசகம் சிம்பொனி இசையமைத்த போது அதில் இணைந்து பாட வாய்ப்பு அளித்ததை மறக்க முடியாது.

இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழலால் பாட முடியாத நிலை. பல் டாக்டரான கணவர் பிரபுவேணுகோபாலுடன் இணைந்து பல் மருத்துவத்தில் இறங்கினேன். 15 ஆண்டுகளுக்கு பிறகு முன்பு போல பாடும் வாய்ப்பு உருவானதால் கணவர் கொடுத்த ஐடியா படி யூடியூப் சேனல் துவங்கி லைட் மியூசிக் அண்ட் வாய்ஸ் கல்ச்சரல் பயிற்சி அளித்து வருகிறேன். சினிமாவில் பாடுவதை லட்சியமாக கொண்டவர்களுக்கு உதவிடும் வகையில் சினிமா பாடல்களுக்கு ஸ்வரம் எழுதி பாடி சேனலில் வெளியிட்டு வருகிறேன். இதுவரை 275 பாடல்களுக்கு ஸ்வரம் வெளியிட்டது வரவேற்பை பெற்றிருக்கிறது.

நன்றாக பாட வேண்டும் என விரும்புவோர் அதை பார்த்து பாடல்களை சரியாக ராகத்துடன் பாடி சந்தோஷமடைகின்றனர். ஒரு நாதஸ்வர வித்வான் குல தெய்வம் போல பாடல்கள் பாட எந்த எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக ஸ்வரம் வெளியிட்டு வருகிறீர்கள் என பாராட்டியதை நினைத்தால் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

சென்னையில் ஸ்டூடியோ துவங்கி ஆன்லைன் லைட் மியூசிக், வாய்ஸ் கல்ச்சரல் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறேன். உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோர் இணைந்துள்ளனர். தனியார் டிவியில் சரிகமப போட்டி ட்ரெயினராக பணிபுரிகிறேன். முறையாக இசை பயின்று பாடகராக வேண்டும் என எண்ணத்துடன் வருவோருக்கு பயிற்சியளித்து வெற்றி பெற வைப்பதை தான் முதல் வேலையாக கொண்டுள்ளேன் என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட

மேலும் படிக்க

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்

மேலும் படிக்க

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map