ஜனநாயகன் எப்போது வெளியாகும்?
எழுத்து
அளவு
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள படம் "ஜனநாயகன்". ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம், தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் வெளியீடு தள்ளிப் போனது.இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் தணிக்கை முடிவடைந்ததாக செய்திகள் வெளிவந்தன. இருந்தாலும், தேர்தல் ஆணையத்திடம் முடிவு குறித்து பரிந்துரைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். இப்படத்தின் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாலும், தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளதாலும் அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டுமாம்.தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. விஜய் அரசியல் கட்சித் தலைவர் என்பதால் இந்தப் படம் தற்போது வெளிவந்தால் அவரது பிரசாரத்திற்கும் பேருதவியாக இருக்கும்.ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன. எனவே, மே 4ம் தேதிக்குப் பிறகே படம் வெளியாகலாம் என சிலர் சொல்கிறார்கள். இருந்தாலும் ஜுன் 22ம் தேதி விஜய் பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு அந்த சமயத்தில் படத்தை வெளியிடவும் வாய்ப்புள்ளது. அடுத்த வாரத்தில் இப்படத்தின் வெளியீடு குறித்த உறுதியான தகவல் வெளியாகலாம்.
கோலிவுட் செய்திகள்
தவெக தலைவர், நடிகர் விஜய் தமிழக முதல்வர் ஆகிவிட்டார். இவர் கட்சி தொடங்கியதில் இருந்து ரஜினிக்கும், அவருக்கும் நட்பு சரியாக இல்லை. திமுக ஆதரவாளராகவே ரஜினி இருந்தார் என்று கூறப்பட்டது.
தமிழ்த் திரையுலகத்தில் உச்ச நடிகராக இருந்தவர் விஜய். அரசியலில் இறங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.