ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகும் ஆகஸ்ட் 25 படங்கள்

ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகும் ஆகஸ்ட் 25 படங்கள்
Advertisement
எழுத்து அளவு

ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த "ஜெயிலர்" படம் வெளிவந்து நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதால் கடந்த வாரம் அதிக அளவில் படங்கள் வெளியாகவில்லை. முன்னணி நடிகர்கள் யாரும் அந்த போட்டியில் தங்களது படங்களை வெளியிடத் தயாராக இல்லை.

இந்த வாரமும் "ஜெயிலர்" படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் புதிய படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த வார இறுதி வரையிலும் "ஜெயிலர்" படத்திற்கான வரவேற்பு அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அடுத்தடுத்து பல பெரிய படங்கள் வரிசை கட்டி வருவதால் பலரும் கிடைக்கும் இடைவெளியில் படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால், இந்த வாரம் மூன்று படங்கள் வெளியாகும் என்று இதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் நடிக்கும் "அடியே,", ஆதி, யோகி பாபு, ஹன்சிகா நடிக்கும் "பாட்னர்", ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட் நடித்துள்ள "ஹர்காரா" உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

செப்டம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் இறுதி வரையிலும் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 5 படங்கள் வரை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

இயக்குனர் சேரனின் தாயார் காலமானார்

இயக்குனர் சேரனின் தாயார் காலமானார்

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குனர் சேரன். ஏராளமா படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாயார் கமலா பாண்டியன், 84, காலமானார். வயது


கார்த்தி 30 துவங்கியது

கார்த்தி 30 துவங்கியது

தமிழில் சர்தார் 2, மார்ஷல் படங்களில் நடித்துள்ள கார்த்தி, அடுத்தப்படியாக தெலுங்கில் மேட் என்ற படத்தை இயக்கிய கல்யான் சங்கருடன் இணைந்திருக்கிறார். இது கார்த்தியின் 30-வது படமாக


இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா?

இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா?

முதல்வர் விஜய் நடித்து ஜனவரி 9ம் தேதி வர வேண்டிய ஜனநாயகன் படம் இன்னமும் வரவில்லை. ஒவ்வொருமுறையும் மறைமுகமாக ரிலீஸ் தேதி சொல்லப்படுகிறது. கடைசி நேரத்தில் அது ரத்தாகிறது. காரணம்,


கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி

கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி

கேரளாவில் உள்ள சில பல்கலைக் கழகங்கள் டி.லிட் என அழைக்கப்படும் கவுரவ முனைவர் பட்டத்தை வழங்கி வருகின்றன. இலக்கியம், கலை, கலாசாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் சிறந்த பங்களிப்பு


25 ஆண்டுகளை நிறைவு செய்த ஆனந்தம்

25 ஆண்டுகளை நிறைவு செய்த ஆனந்தம்

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்குனராக அறிமுகமாக, மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா மற்றும் பலர் நடிப்பில் 2001ம் ஆண்டு மே 25ம் தேதி வெளியான படம் ஆனந்தம்.

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map