சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பிக்பாஸ் என்றாலே பிரச்னை தான்: வனிதா

பிக்பாஸ் என்றாலே பிரச்னை தான்: வனிதா
Advertisement
எழுத்து அளவு

எஸ்.ஆர்.பிலிம் பேக்ட்ரி சார்பில் ராஜன் தயாரித்து, இயக்கியுள்ள படம் "இமெயில்". இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக "முருகா" அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது.

இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது: இந்த தலைப்பிற்கு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. இமெயில் என்றாலே இன்று எல்லோருக்கும் தெரியும். இந்தப்படம் ஒரு கேமை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. கேம் என்றாலே பிரச்சினைதான். அது பிக்பாஸ் கேமாக இருந்தாலும் சரி, போனில் இருக்கும் கேமாக இருந்தாலும் சரி எந்த கேமாக இருந்தாலும் அதில் நிச்சயமாக நமது மனது ஈடுபடத்தான் செய்யும். நாம் என்னதான் விளையாட்டிற்குள் சென்றாலும் கூட நமது மனதை பாதுகாப்பாக தற்காத்து வைக்க வேண்டும். ஆனால் அது இந்தக்கால தலைமுறையினரிடம் மிகவும் குறைவாக இருக்கிறது.

பிறந்த குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு நம்மை விட எல்லாமே அதிகமாக தெரிகிறது. அதேசமயம் குழந்தைகளுக்கு எதை எவ்வளவு சொல்லிக் கொடுக்க வேண்டும், எதில் அவர்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதை பெரியவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த படத்தில் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா

பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா

1980களில் கவுண்டமணி, செந்தில் காமெடிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் கருப்பு சுப்பையா. ஏற்கெனவே வெள்ளை சுப்பையா என்று ஒருவர் இருந்ததால் இவர் தனது பெயரை


டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன்

டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது சினிமா துறையில் இருந்து விஜய்யை அதிகம் விமர்சித்தது இயக்குனர் சேரன். தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதும், விஜய்யை விமர்சித்ததற்காக மன்னிப்பு


ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்

ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக தோல்வி அடைந்த நிலையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது அப்போது

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map