சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

ப்ரோ கோட் தலைப்பு மாறுகிறது

ப்ரோ கோட் தலைப்பு மாறுகிறது
Advertisement
எழுத்து அளவு


கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் "ப்ரோ கோட்". ரவி மோகன் தயாரிக்கும் முதல் படம் இது. இப்படம் அறிவிக்கப்பட்ட உடனே "ப்ரோ கோட்" எங்கள் பிராண்ட் நேம் எனவே இந்த தலைப்பை உபயோகிக்க கூடாது என்று டில்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் இரண்டு தரப்பும் கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் கோர்ட்டில் தெரிவித்தபடி இரண்டு தரப்புக்கு உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

அதாவது தலைப்பை பயன்படுத்த பெரிய தொகை தரவேண்டும், அல்லது படத்தில் எங்கள் தயாரிப்பை புரமோட் செய்ய வேண்டும் என்று மதுபான கம்பெனி தரப்பில் கேட்டதாகவும் இதற்கு ரவிமோகன் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இதுவரை வெளியிட்ட புரமோசன்கள், வீடியோக்களில் இருந்து "ப்ரோ கோட்" என்ற தலைப்பை நீக்கி, "புரொடக்ஷன் நம்பர் ஒன்" என்று சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை

ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை

நடிகர் ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் ரவி மோகன்,

மேலும் படிக்க

கருப்புக்கு கடைசிநேரத்தில் வந்த சிக்கல் : களத்தில் சூர்யா

கருப்புக்கு கடைசிநேரத்தில் வந்த சிக்கல் : களத்தில் சூர்யா

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாக வேண்டிய படம் கருப்பு.இப்படம் சில சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருப்பதால் இன்று

மேலும் படிக்க

கொச்சி அழகும்... பின்னே ராஷ்மிகா மந்தனா பதிவும்…

கொச்சி அழகும்... பின்னே ராஷ்மிகா மந்தனா பதிவும்…

இந்தியத் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது மைசா என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பு கேரளாவின்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map