தி கோட் படத்தில் சி.எஸ்.கே வீரர்
வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து " தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்" சுருக்கமாக ‛தி கோட்" எனும் பிரமாண்டமான படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை செப்டம்பர் 5ம் தேதி அன்று வெளியாகிறது. இதன் விளம்பர பணிகளும் மற்றும் டிக்கெட் முன் பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதில் ஒரு காட்சியில் ஸ்டேடியத்தில் நடைபெறும் கிரிக்கெட் காட்சிகள் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிரிக்கெட் கமெண்டரி கொடுக்கும் காட்சியில் முன்னாள் சி.எஸ்.கே மற்றும் இந்திய அணியின் வீரர் பத்ரிநாத் நடித்துள்ளார். இதற்கான டப்பிங் பணிகளும் முடிவடைந்ததாக இப்போது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பத்ரிநாத்.
கோலிவுட் செய்திகள்
ஒரு காலத்தில் பிரபுதேவா நண்பராக, அவரின் கணக்கு வழக்குகளை பார்ப்பவராக இருந்தவர் கே.ஜே.ஆர் என்ற அழைக்கப்பட்ட கோட்டப்பாடி ஆர் ராஜேஷ். அடுத்து நயன்தாராவுக்கும் நம்பிக்கைக்கு உரியவராக
தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி முதல்வர் ஆகியுள்ளார் விஜய். தனது கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டவர்களையும் நேரில்
2008ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் சிலந்தி. முன்னா, மோனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படம் தெலுங்கில் எர்ர குலாபிஎன்றும், இந்தியில் ஜால் - தி நெட் என்ற





கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.