டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன்
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்தவாரம் வெளியான படம் ‛டியூட்". இளைஞர்களை கவரும் விதமாக வந்துள்ள இப்படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கி உள்ளது. 5 நாளில் 95 கோடி வசூலை உலகளவில் ஈட்டியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடந்த டியூட் படம் நன்றி அறிவிப்பு விழாவில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் பேசியது : தமிழகம் மட்டுமல்ல ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ,கேரளா மற்றும் பல வெளிநாடுகளில் இந்த படம் வெற்றி அடைந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. இந்த படம் சில விவாதங்களை உருவாக்கி உள்ளது. சிலருக்கு கதையில் மாற்று கருத்து உள்ளது. ஆனாலும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது வேறொரு விஷயம் தெரிய வரும். இரண்டாவது மூன்றாவது முறை பார்ப்பவர்கள் படத்தை வேறு மாதிரி பீல் பண்ணுகிறார்கள். இந்த படம் பல ஆண்டுகளுக்கு பார்க்கப்பட்டு கொண்டே இருக்கும் என நம்புகிறேன். இப்படி ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்த இயக்குனர் கீர்த்தீஸ்வரனுக்கு நன்றி.
15 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பார்த்த சரத்குமாரை இதில் பார்க்கிறோம். சுப்ரீம்ஸ்டார் கம்பேக் எனலாம். அதேப்போல் ஹீரோயின் மமிதா பைஜூ சிறப்பாக நடித்துள்ளார். அவரின் சின்ன சின்ன நடிப்பு அசைவுகளை கூட பாராட்டுகிறார்கள். சாய் அபயங்கரின் இசை மற்றும் பாடல்கள் படத்துக்கு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. இன்னும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் எனக்கு புது ரசிகர்கள் நிறைய பேர் கிடைத்திருக்கிறார்கள் அவர்களுக்கும், படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோலிவுட் செய்திகள்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த கருப்பு படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தயாரிப்பாளர் ஏற்பட்ட மோதல்
தற்போது அட்லி இயக்கும் ராக்கா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 23வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரியில் பொங்கல் தினத்தில் திரைக்கு வர இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்னை காரணமாக படத்தின் ரிலீஸ்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.