100வது நாள் போஸ்டரை வெளியிட்ட டியூட்

100வது நாள் போஸ்டரை வெளியிட்ட டியூட்
Advertisement
எழுத்து அளவு

அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், அறிமுக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு 2025 அக்டோபர் 17ம் தேதி வெளியான படம் "டியூட்". இன்றைய இளம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்த இப்படம் வெளியான ஒரு வாரத்திற்குள் 100 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

படம் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடி தளத்திலும் வெளியானது. அதிலும் அதிகப் பார்வைகளைப் பெற்ற ஒரு படமாக இருந்தது. தற்போது எந்தத் தியேட்டரிலும் இப்படம் ஓடவில்லை. இருந்தாலும் படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆவதால் தயாரிப்பு நிறுவனம் 100வது நாள் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

டியூட் எப்போதும் நேசிக்கப்படுகிறது, டியூட் எப்போதும் கொண்டாடப்படுகிறது, டியூடிஸத்தின் 100வது பிளாக்பஸ்டர் நாள் என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள்.

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வந்த படங்களில், "லவ் டுடே, டிராகன்" படங்கள் 100 கோடி வசூலித்தன. அடுத்து "டியூட்" படமும் 100 கோடி வசூலித்து ஹாட்ரிக் 100 கோடி நாயகன் என்ற பெருமையை பெற்றுத் தந்தது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஆதவ் அர்ஜூனா, ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி சந்திப்பு ஏன்?

ஆதவ் அர்ஜூனா, ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி சந்திப்பு ஏன்?

ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் நிர்வாகி செண்பகமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மிக முக்கியமான புள்ளியாக இருந்தார். ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் படங்கள், ரெட் ஜெயன்ட் விநியோகம்


கூடுதலாக ஒரு காட்சி: அரசு உத்தரவால் சினிமாவுக்கு லாபமா?

கூடுதலாக ஒரு காட்சி: அரசு உத்தரவால் சினிமாவுக்கு லாபமா?

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றபின் தவெக அரசு சினிமாதுறைக்கு முதல் உத்தரவாக, இனி புதுப்படங்கள் முதல் 7 நாட்கள் 5 காட்சிகளை நடத்தலாம். உள்ளூர் பண்டிக்கை நாட்களிலும் கூடுதல் 1 காட்சி


முறைமாமன்-ஐ ரீமேக் பண்ண ஆசை: சுந்தர்.சி, குஷ்பு மகள் அனந்திதா

முறைமாமன்-ஐ ரீமேக் பண்ண ஆசை: சுந்தர்.சி, குஷ்பு மகள் அனந்திதா

அவ்னி மூவிஸ் சார்பில் உருவாகும் டபுள் ஆக்குபன்சி படத்தை அஸ்வின் கந்தசாமி இயக்க, சந்தோஷ், ரேஷ்மா, சம்யுக்தா நடிக்கிறார்கள். குஷ்புவின் குடும்ப நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு


7 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பியுள்ள ஆன் ஷீத்தல்

7 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பியுள்ள ஆன் ஷீத்தல்

மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஆன் ஷீத்தல் காளிதாஸ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் அவர் பரத் மனைவியாக நடித்திருந்தார். அதன்பிறகு ஆர்.ஜே.பாலாஜி நடித்த


ஒரு வழியாக திரைக்கு வருகிறார் இதயம் முரளி

ஒரு வழியாக திரைக்கு வருகிறார் இதயம் முரளி

சுதா கொங்கரா இயக்கதில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தை தயாரித்தவர் ஆகாஷ் பாஸ்ரன். அவர் இயக்கி உள்ள படம் இதயம் முரளி. இதில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map