லாக்டவுன் : இந்த முறை சரியாக வந்துவிடுமா ?
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏஆர் ஜீவா இயக்கத்தில், என்ஆர் ரகுநந்தன், சித்தார்த் விபின் இசையமைப்பில் அனுபமா பரமேஸ்வரன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் "லாக்டவுன்".
இப்படம் ஜனவரி 30ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. இதற்கு முன்பு இப்படத்தின் வெளியீடு, 2024 ஜுன் மாதம் வெளியாகும் என அப்போது வெளியிட்ட டீசரில் குறிப்பிட்டிருந்தார்கள். அப்போதே இந்தப் படத்தைப் பற்றியும், டீசரையும் படத்தின் நாயகி அவரது சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை.
அதன்பின் படத்தின் வெளியீடு பற்றி எந்த சத்தமும் இல்லாமல் "லாக்டவுன்" காலகட்டம் போல அமைதியாகப் போனது. கடந்த வருடம் டிசம்பர் 5ல் படத்தை வெளியிடுவதாக அறிவித்து, பின் மீண்டும் டிசம்பர் 12ம் தேதி வெளியிடுவதாக அறிவித்து, கடைசியில் அதையும் தள்ளி வைத்தார்கள். நேற்று அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 30ம் தேதி எந்தத் தள்ளி வைப்பும் இல்லாமல் படத்தை வெளியிட்டு விடுவார்கள் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
இந்தப் படத்தை அடுத்து விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள "சிக்மா" படத்தை லைகா நிறுவனம் வெளியிட உள்ளது.
கோலிவுட் செய்திகள்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த கருப்பு படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தயாரிப்பாளர் ஏற்பட்ட மோதல்
தற்போது அட்லி இயக்கும் ராக்கா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 23வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரியில் பொங்கல் தினத்தில் திரைக்கு வர இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்னை காரணமாக படத்தின் ரிலீஸ்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.