சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பிளாஷ்பேக்: எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியாக நடித்த பத்மினி

பிளாஷ்பேக்: எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியாக நடித்த பத்மினி
Advertisement
எழுத்து அளவு

"நாட்டிய பேரொளி" பத்மினி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அன்றைக்கு இருந்த முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். ஆனால் அவர் எம்.ஆர்.ராதாவுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். அந்த படம் "சித்தி". பத்மினி கேரியரில் இந்த படம் முக்கியனதாகவும் அமைந்தது. தமிழ் எழுத்தாளரான வை.மு.கோதைநாயகி எழுதிய "தயாநிதி" என்ற நாவலை தழுவி இந்த படம் உருவானது. கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கினார்.

பத்மினியுடன் எம்.ஆர்.ராதா, ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ், வி.கே.ராமசாமி, வி.ஆர்.ராஜகோபால், விஜயநிர்மலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
கதையின் நாயகியான பத்மினிக்கு 3 சகோதரிகள், ஒரு தம்பி. குடும்ப சுமை பத்மினி தலையில். தம்பியை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும். சகோதரிகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். தம்பிக்கு டாக்டர் சீட் கிடைத்தும் அதற்கு பணம் கட்ட முடியாத நிலை. இந்த நிலையில் குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்கு அவர் பெரும் கோடீஸ்வரரான எம்.ஆர்.ராதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார்.

கோபம், காமம், திமிர் நிறைந்த எம்.ஆர்.ராதாவை அவர் எப்படி சமாளித்தார். தன் குடும்பத்தை எப்படி கரை சேர்த்தார் என்பதுதான் படத்தின் கதை. பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் 1966ம் ஆண்டு வெளியானது. பின்னர் "ஆருத்" என்ற பெயரில் இந்தியிலும், "பின்னி" என்ற பெயரில் தெலுங்கிலும், "சிக்கம்மா" என்ற பெயரில் கன்னடத்திலும், "அச்சண்டே பார்யா" என்ற பெயரில் மலையாளத்திலும் ரீமேக் ஆனது. இன்று பத்மினியின் 18வது நினைவு நாள்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை

உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை

தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை மிருணாள்

மேலும் படிக்க

30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா

30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா

தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, நடிப்புத் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி உருவான பல படங்களில்

மேலும் படிக்க

முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

சினிமா துறையிலிருந்து வந்து இன்று தமிழகத்தின் முதல்வராகி உள்ளார் நடிகர் விஜய். அவர் பொறுப்பேற்றது முதல் பல துறையை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map