கவுரி கிஷனின் பேராசை
எழுத்து
அளவு
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛அதர்ஸ்". இந்த படத்தில் டாக்டராக நடித்துள்ளார் 96 படத்தில் ஜானுவாக நடித்த கவுரி கிஷன். ஹீரோவாக ஆதித்ய மாதவன் நடித்துள்ளார். படம் குறித்து கவுரி கூறுகையில், ‛‛செயற்கை கருத்தரிப்பு, அந்த சிகிச்சை பின்னணியில் கதை உருவாகி உள்ளது. ஹீரோ போலீஸ் ஆகவும், நான் டாக்டராகவும் வருகிறேன். குற்றம் 23 படத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. அது வேறு கதை, இது வேறு. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நான் நடித்து இருந்தாலும் 96 பட ஜானுவை மக்கள் இன்னும் மறக்கவில்லை, இன்றும் கொண்டாடுகிறார்கள். அந்த கேரக்டரை விட நல்ல கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறேன். அது பேராசை தான்"" என்றார்.
கோலிவுட் செய்திகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.