சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ?

ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ?
Advertisement
எழுத்து அளவு

2025ம் ஆண்டின் காலாண்டு நேற்றோடு முடிவடைந்துவிட்டது. இந்த மூன்று மாதங்களில் சுமார் 65 படங்கள் வரை வெளிவந்துள்ளன. ஆனால், இந்த ஏப்ரல் மாதத்தில் குறிப்பிடும்படியான படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அடுத்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி அஜித் நடித்துள்ள "குட் பேட் அக்லி" படம் வெளிவருவதே அதற்குக் காரணம். அதற்கு முன்னதாக இந்த வாரம் குறிப்பிடும்படியான படங்கள் வெளியாகவில்லை.

ஏப்ரல் 18ம் தேதி சிபிராஜ் நடித்துள்ள "டென் ஹவர்ஸ்" படம் வெளியாக உள்ளது. இப்படத்தை முதலில் பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தள்ளி வைத்துவிட்டார்கள். படம் பற்றிய பேச்சு சிறப்பாக இருந்ததால் நல்ல இடைவெளி பார்த்து படத்தை வெளியிட முடிவு செய்து வெளியிடுகிறார்கள்.

ஏப்ரல் 24ம் தேதி சுந்தர் சி, வடிவேலு நடித்துள்ள "கேங்கர்ஸ்" படம் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு, சுந்தர் சி இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிறையவே உள்ளது.

இந்த ஏப்ரல் மாதத்தில் "குட் பேட் அக்லி, டென் ஹவர்ஸ், கேங்கர்ஸ்" ஆகிய மூன்றே மூன்று படங்கள் மட்டும்தான் குறிப்பிடும்படியான வெளியீடுகளாக உள்ளன. இந்த மூன்று படங்களின் தலைப்புகளுமே ஆங்கிலத் தலைப்புகள் என்பதில் ஒரே ஒரு ஒற்றுமை உள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ?

சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ?

தெலுங்குத் திரையுலகத்தில் புதிய படங்களை சதவீத பங்கு அடிப்படையில் மட்டுமே வெளியிடுவோம் என தெலங்கானா தியேட்டர்கள் சங்கம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதற்கு தயாரிப்பாளர் சங்கம் தக்க

மேலும் படிக்க

தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி

தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி

தமிழகத்தில் கும்பகோணத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்து மும்பையில் செட்டிலானவர் இயக்குனர் பால்கி. அவரது முழுப்பெயர் பாலகிருஷ்ணன், சுருக்கமாக பால்கி என வைத்துக் கொண்டார்.2007ல்

மேலும் படிக்க

கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி

கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் கருப்பு. இப்படம் நேற்று மே 14ம் தேதி

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map