மீண்டும் தாமதமாகும் ஜனநாயகன் ரிலீஸ்
தமிழக சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டுதான் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" படத்தின் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவது தாமதம் ஆகிறது என்ற குற்றச்சாட்டு ஒன்று இருந்தது. நீதிமன்ற வழக்கு வரை சென்று பின்னர் வாபஸ் பெற்றார்கள்.
சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டசபைத் தேர்தலும் முடிந்துவிட்டது. அதனால், விரைவில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு விடும் என தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்ததாம். ஆனால், படத்தை மீண்டும் பார்த்துவிட்டுத்தான் சான்றிதழ் வழங்குவோம் என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மே 4ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அதற்கடுத்த சில நாட்களில் தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறதாம். அதனால், மே 8 அல்லது 15ம் தேதிகளில் படத்தை வெளியிடலாமா என யோசிக்கிறார்களாம். ஆனால், தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்காமல் எந்த அறிவிப்பையும் வெளியிட வேண்டாம், அதுவரை பொறுமையாக இருப்போம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.
மே 14ம் தேதி சூர்யா நடித்துள்ள "கருப்பு" படம் வெளிவருவதால் அந்த வாரத்திலும் படத்தை வெளியிட முடியாது. மே 22 அல்லது மே 29 ஆகிய நாட்களில் "ஜனநாயகன்" வெளிவர வாய்ப்புள்ளது.
கோலிவுட் செய்திகள்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த கருப்பு படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தயாரிப்பாளர் ஏற்பட்ட மோதல்
தற்போது அட்லி இயக்கும் ராக்கா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 23வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரியில் பொங்கல் தினத்தில் திரைக்கு வர இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்னை காரணமாக படத்தின் ரிலீஸ்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.