வாரியர் - முதல் தோல்வியை சந்திக்கும் கிர்த்தி ஷெட்டி
அறிமுகப் படத்திலேயே வெற்றிகரமான நாயகியாக பெயரெடுப்பது சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு வெற்றியை ருசித்தவர் கிர்த்தி ஷெட்டி. தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த முதல் படமான "உப்பெனா" படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இளம் ரசிகர்களின் மத்தியில் நிறைய பேசப்பட்டார்.
தொடர்ந்து அவர் தெலுங்கில் நடித்த "பங்கார்ராஜு, ஷியாம் சிங்கா ராய்" ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தது. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்ற கிர்த்திக்கு முதல் தோல்வியாக "வாரியர்" படம் அமைந்துவிட்டது என அவரது ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.
லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்த "வாரியர்" படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. ராம் போலவே கிர்த்திக்கும் தமிழில் இதுதான் முதல் படம். தமிழில் இப்படம் சுமார் வெற்றியைக் கூடப் பெறவில்லை. தமிழில் தனது முதல் அறிகமுமே இப்படியாகிப் போனதில் கிர்த்தி ரொம்பவே அப்செட்டாம்.
அடுத்து பாலா இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் "வணங்கான்" படம் தனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் கிர்த்தி.
கோலிவுட் செய்திகள்
அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி,
சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.