12 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மாளவிகா

12 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மாளவிகா
Advertisement
எழுத்து அளவு

அஜித் நடித்த உன்னை தேடி என்ற படத்தில் அறிமுகமானவர் மாளவிகா. அதன் பிறகு ஆனந்த பூங்காற்றே, வெற்றிக் கொடிகட்டு, சந்திரமுகி, திருட்டுப்பயலே உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் பரவலாக நடித்து வந்த மாளவிகா 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த மாளவிகா ஒரு கட்டத்தில் தான் கர்ப்பமானதும் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

தற்போது சோசியல் மீடியாவில் தனது போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த மாளவிகா மறுபடியும் தான் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இப்போது ஜாகுவார் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் கோல்மால் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் மாளவிகா. பொன் குமரன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவா ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள் : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள்

முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள் : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள்


தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா?

தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா?


புருஷன் படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்!

புருஷன் படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்!

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map