மமிதா பைஜுக்கு அடுத்தடுத்து 4 படங்கள் ரிலீஸ்

மமிதா பைஜுக்கு அடுத்தடுத்து 4 படங்கள் ரிலீஸ்
Advertisement
எழுத்து அளவு


தமிழ் சினிமாவில் இப்போதைய இளம் நடிகையரில் முன்னணி நடிகை என்றால் அது மமிதா பைஜு தான். இந்த வருடத்திலேயே அடுத்தடுத்து அவருக்கு 4 படங்கள் வெளியாக உள்ளன. நான்கு படங்களுமே முக்கியமான படங்கள்தான்.

இந்த வருடத்தில் அவரது முதல் தமிழ்ப் படமான விஜய்யுடன் நடித்த "ஜனநாயகன்" படம் வந்திருக்க வேண்டும். ஆனால், அது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. எப்படியும் மே மாதத்தில் அந்தப் படம் வெளிவந்துவிடும்.

அதனால், முதல் படமாக ஏப்ரல் 30ம் தேதி தனுஷ் ஜோடியாக நடித்துள்ள "கர" படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளாராம். படம் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. எனவே, இந்த வருடத்தில் தனது வெற்றிக் கணக்கை அவர் "கர" மூலம் ஆரம்பித்து வைப்பார் என்கிறார்கள்.

அதற்கடுத்து விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்துள்ள "இரண்டு வானம்" படம் வெளிவரலாம். இந்தப் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளாராம்.

நான்காவது படமாக சூர்யா ஜோடியாக நடித்துள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படம் வெளிவர உள்ளது. ஒரே ஆண்டில் இப்படி நான்கு முக்கியப் படங்களில் நடித்துள்ள மமிதா பைஜு இவற்றின் மூலம் நல்ல நடிகை என்ற பெயர் எடுக்கும் அளவிற்கு அந்தப் படங்களில் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளது என்பதுதான் கூடுதல் தகவல்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

முதல் வார இறுதியில் 140 கோடி வசூலித்த திரிஷ்யம் 3

முதல் வார இறுதியில் 140 கோடி வசூலித்த திரிஷ்யம் 3

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் திரிஷ்யம் 3. இப்படம் 58 மணி நேரத்தில் 100 கோடி வசூலைப் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம்


டிக்கெட் விலை அதிகரிக்கணும் : விஜய்சேதுபதிக்கு கண்டனம்

டிக்கெட் விலை அதிகரிக்கணும் : விஜய்சேதுபதிக்கு கண்டனம்

சமீபத்தில் நடந்த பரிமளா அண்ட் கோ பட விழாவில் சினிமா தியேட்டரில் டிக்கெட் விலை அதிகரித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை அதிகரிக்கணும். அதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று


இந்த வாரம் சில படங்கள் மட்டுமே ரிலீஸ்….

இந்த வாரம் சில படங்கள் மட்டுமே ரிலீஸ்….

கோடை விடுமுறையும், ஐபிஎல் போட்டிகளும் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. இந்த வருட கோடை விடுமுறையை சூர்யா நடித்து வெளிவந்த கருப்பு படம் மட்டுமே சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அப்படம்


பிளாஷ்பேக் : தியேட்டரில் வெளியாகாத பாலுமகேந்திரா படம்

பிளாஷ்பேக் : தியேட்டரில் வெளியாகாத பாலுமகேந்திரா படம்

1989ம் ஆண்டு பாலு மகேந்திராவால் தயாரிக்கப்பட்டு, எழுதப்பட்டு, இயக்கப்பட்ட படம் சந்தியாராகம். அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர் மற்றும் ஓவியர் சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில்


பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ்

பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ்

தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். சேலத்தை தலைமையிடமாக கொண்டு 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தது. இதன் நிறுவனர் டி.வி.சுந்தரம் வெளிநாட்டில்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map