சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

மனோபாலா வெளியிட்ட செல்பியினால் வந்த விபரீதம்

மனோபாலா வெளியிட்ட செல்பியினால் வந்த விபரீதம்
Advertisement
எழுத்து அளவு

இயக்குனரும், நடிகருமான மனோபாலா சோசியல் மீடியாவில் ரொம்ப பிசியாக இருப்பார். யார் படங்களுக்கு பூஜை போட்டாலும் அந்த செய்தியை டுவிட்டரில் பதிவிடுவார். அதேபோல் எந்த படங்கள் வெளியானாலும் வெற்றி பெற வாழ்த்து சொல்வார். அதோடு தனது புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிடுவார். இந்நிலையில் தற்போது அவர் படுத்திருப்பது போன்ற ஒரு செல்பியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்து, அவர் மருத்துவமனையில் படுத்திருப்பதாக நினைத்துக் கொண்டு, என்ன ஆச்சு சார்? கொரோனா ஏதாவது வந்திருச்சா? உடம்ப பார்த்துக் கோங்க... என்று பலரும் நலம் விசாரித்ததோடு, அவர் குணமடையவும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து தனது டுவிட்டரில் உடனடியாக ஒரு மறுப்பு செய்தி பதிவிட்டுள்ளார் மனோபாலா. அதில், என் அன்பு மக்களே, நான் ஏதோ ஒரு போட்டோவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு நினைக்கல. நான் நல்லா தான் இருக்கேன். எனக்கு ஒன்றுமில்லை. அன்பு (அப்படித்தான் சொல்லனும்) காட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா

மலையாளத்தில் அறிமுகமான அபர்ணா தாஸ், பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். 2023ம் ஆண்டு வெளிவந்த டாடா படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார். ஆனாலும் தொடர்ச்சியாக அவருக்கு

மேலும் படிக்க

ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார்

ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார்

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப். காமெடியான வில்லன் கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றவர். ஆறரரை அடி உயரம் 150 கிலோ எடை கொண்ட இவர் திரையில் வந்தாலே மிரட்டலாக இருக்கும்.

மேலும் படிக்க

பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை

பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை

சித்ராலயா கோபு நகைச்சுவை படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் ஆஸ்தான வசனகர்த்தாவாகவும் இருந்தார். என்றாலும் தொடர்ந்து நாடகமும் எழுதி, இயக்கிக் கொண்டிருந்தார். அப்படி அவர்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map