80 ஆண்டுகளை நிறைவு செய்த மீரா

80 ஆண்டுகளை நிறைவு செய்த மீரா
Advertisement
எழுத்து அளவு


தமிழ் சினிமா உலகின் முக்கியமான படங்களில் ஒன்று எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில், எம்எஸ் சுப்புலட்சுமி நடித்து வெளிவந்த படம் "மீரா". 1945ம் ஆண்டு தீபாவளி நாளான நவம்பர் 3ம் தேதி அப்படம் வெளிவந்தது. இன்றுடன் 80 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்தப் படத்தைத் தியேட்டர்களில் பார்த்த அனுபவம் கொண்ட யாரோ ஒரு சிலர்தான் இன்று இருக்க வாய்ப்புண்டு.

1949ம் ஆண்டு செக்கோஸ்லோவேகியா, பெரு, டொரான்டோ, வெனிஸ் ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பெருமை பெற்ற ஒரு திரைப்படம் "மீரா".

கிருஷ்ண பகவானின் தீவிர பக்தையான மீரா பற்றிய கதைதான் "மீரா". 1945ல் இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே 1936ல் "மீராபாய்" என்ற ஒரு படமும், 1938ல் "பக்த மீரா" என்ற மற்றொரு படமும் வெளிவந்தன.

1945ல் வெளிவந்த "மீரா" படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் புகழைப் பெற்றார் எம்எஸ் சுப்புலட்சுமி. அப்படம் வெளிவருவதற்கு முன்பு 1938ல் வெளியான "சேவாசதனம்" என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார் சுப்புலட்சுமி. ஆனால், "மீரா" தான் அவரை இந்தியா முழுவதும் பிரபலமடைய வைத்தது.

பிரபல எழுத்தாளர் கல்கி, கதை வசனம் எழுத, எஸ்வி வெங்கட்ராமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சித்தூர் வி நாகையா, செகளத்தூர் சாமா, கே சாரங்கபாணி, டிஎஸ் பாலையா, கேஆர் செல்வம், டிஎஸ் துரைராஜ், ஆர் சந்தானம் ஆகியோருடன் சிறிய வேடம் ஒன்றில் எம்ஜிஆர் நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற "காற்றினிலே வரும் கீதம்" பாடலை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கேட்டு ரசிக்கும் இசை ரசிகர்கள் உள்ளார்கள்.

1947 இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தப் படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. கவிக்குயில் சரோஜினி நாயுடு படத்தின் ஆரம்பத்தில் , படத்தையும் எம்எஸ் சுப்புலட்சுமியையும் பாராட்டிப் பேசியது இணைக்கப்பட்டது. படத்தின் பிரிவியு காட்சிக்கு நேரு, மவுண்ட் பேட்டன் இருவரும் இணைந்து வந்து படத்தைப் பார்த்துப் பாராட்டினர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை

18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை

சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த கருப்பு படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத்ரெட்டி, அனகா, மாயா ரவி மற்றும் நட்டி


அல்லு அர்ஜுன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கிரிக்கெட் வீரர்

அல்லு அர்ஜுன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கிரிக்கெட் வீரர்

அல்லு அர்ஜுனின் மகன் அல்லு அயான் தீவிரமான கிரிக்கெட் ரசிகர். அதிலும் குறிப்பாக பிரிமியர் லீக் தொடரில் பெங்களூரு அணிதான் எப்போதும் அவரது பேவரைட். காரணம் அதில் கேப்டனாக உள்ள விராட்


முதல்வர் நடிப்புக்கு முழுக்கு... முன்னாள் துணை முதல்வர் ரீ என்ட்ரியா?

முதல்வர் நடிப்புக்கு முழுக்கு... முன்னாள் துணை முதல்வர் ரீ என்ட்ரியா?

முதல்வர் விஜய் நடித்த குருவி( 2008) படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் உதயநிதி. பின்னர் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலமாக ஆதவன், மன்மதன் அம்பு, 7ம் அறிவு, நீர்ப்பறவை, வணக்கம் சென்னை


தவறுதலாக கிரிக்கெட்டை கால்பந்தாக மாற்றிய ராம்சரண் ; கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார்

தவறுதலாக கிரிக்கெட்டை கால்பந்தாக மாற்றிய ராம்சரண் ; கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார்

தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் பெத்தி. இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜான்வி கபூர்


ஐமேக்ஸில் ஜெயிலர் 2

ஐமேக்ஸில் ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர்.

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map