அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில்
சென்னையில் இன்று நடந்த பிளாக் மெயில் பட விழாவில் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன். காரணம், படத்தில் ஹீரோவாக நடித்தவர் அவர் நண்பர் ஜி.வி.பிரகாஷ். கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கி இருக்கிறார்.
படவிழாவில் ஆதிக் பேசுகையில் ""என்னை திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனர் ஆக்கியவர் ஜி.வி.பிரகாஷ். பல ஆண்டுகளாக எங்கள் நட்பு தொடர்கிறது. இந்த படத்தின் கதை வித்தியாசமானது. இந்த பட இயக்குனர் மாறன் இரவு காட்சிகளை அதிகம் ரசித்து எடுப்பவர். ஆனால், ஹீரோ ஜி.வி.பிரகாசுக்கு இரவு பிடிக்காது. அவர் லைட் போட்டுக் கொண்டுதான் துாங்குவார். அவர் இந்த படத்துக்குபின் மாறியிருப்பார் என நினைக்கிறேன் என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் ""அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்குவது உறுதி. அது குட் பேட் அக்லி மாதிரி இருக்காது, வேறு ஜானரில் இருக்கும். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு , அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும்" என்றார்.
ஹீரோயின், தயாரிப்பாளர் குறித்து ஆதிக் சொல்லவில்லை. ஆனாலும், ரோமியோ பிக்சர் ராகுல் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
கோலிவுட் செய்திகள்
இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில், களவாணி சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன், அதிதி பாலன் நடித்த எக்ஸாம் என்ற வெப்சீரியஸ், மே 15ல் ரிலீஸ் ஆகிறது. வெப்சீரிஸ் குறித்து சற்குணம்
முன்னணி நடிகர்கள், பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்களுக்கு பண்டிகை நாட்கள் அல்லது சாதாரண நாட்களில் கூடுதலாக ஒரு காட்சி இயக்க தமிழக அரசு அனுமதி வழங்குவது வழக்கம்.
ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு வந்தார். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் அதையடுத்து தற்போது புஜ்ஜி
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.