சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

கல்யாணம், விவகாரத்து பற்றி ராம்கோபால் வர்மா கருத்து

கல்யாணம், விவகாரத்து பற்றி ராம்கோபால் வர்மா கருத்து
Advertisement
எழுத்து அளவு

ஹிந்தித் திரையுலகத்தில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து பரபரப்பாகப் பேசப்படுபவர். இன்று கல்யாணம், விவகாரத்து ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து சில டுவீட்டுகளைப் பதிவு செய்துள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து செய்தியைத் தொடர்ந்துதான் அவர் இதைப் பதிவிட்டிருக்க வேண்டும்.

அதில், “திருமணங்களின் அபாயத்தை, ஸ்டார்களின் விவகாரத்துதான் டிரென்ட் செட்டராக அமைந்து இளைஞர்களை எச்சரிக்கிறது. கல்யாணம்தான் காதலை சீக்கிரத்தில் கொன்றுவிடுகிறது. திருமணம் என்ற ஜெயிலுக்குள் செல்வதற்கு முன்பு, காதல் எது வரை தொடர்ந்து இருக்கிறதோ அதுவரையில் மகிழ்ச்சியின் ரகசியமாக அது இருக்கிறது.

ஒரு திருமணத்தில் காதல் என்ற கொண்டாட்டம் 3 முதல் 5 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கிறது. புத்திசாலிகள் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணம் என்பது இருவரின் அபாயமான தகுதிகளை வைத்து அமைதியாக நடைபெற வேண்டும். ஆனால், சுதந்திரமாக விலகுவதால், விவாகரத்து தான் சங்கீத் உள்ளிட்டவைகளுடன் கொண்டாடப்பட வேண்டும். நமது மோசமான முன்னோர்களால் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தீய பழக்கம் திருமணம். அது தொடர்ந்து சுழற்சியாக சோகத்தைக் கொடுத்து வருகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.

ராம்கோபால் வர்மாவின் இந்தக் கருத்துக்களுக்கு வழக்கம் போல கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி

விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி

நடிகர் ரவி மோகன் அவரது காதல் மனைவி ஆர்த்தி ஆகியோர் இடையே பிரிவு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். இந்த வழக்கு குடும்பநல கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனிடையே ரவி மோகன்,

மேலும் படிக்க

ஜனநாயகன் படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஜனநாயகன் படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழுவின் முன் ஆய்வில் உள்ளது. இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 3ம் தேதி சட்ட விரோதமாக இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியானது.

மேலும் படிக்க

ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு

ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு

இந்தியத் திரையுலகம் தற்போது ஒரு நிலையற்ற சூழலில்தான் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகும் படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே வியாபார

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map