சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

ப்ரோ கோட் டைட்டில் வழக்கை வாபஸ் பெற்றார் ரவி மோகன்

ப்ரோ கோட் டைட்டில் வழக்கை வாபஸ் பெற்றார் ரவி மோகன்
Advertisement
எழுத்து அளவு


ரவி மோகன் தயாரித்து நடிக்கும் படம் "ப்ரோ கோட்". கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், "ப்ரோ கோட்" என்ற பெயருக்கு தங்களது நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதை பயன்படுத்தக் கூடாது என்று டில்லியை சேர்ந்த இண்டோ பேவ்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மதுபான உற்பத்தி நிறுவனம் தரப்பில் ரவி மோகடனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, "ப்ரோ கோட்" படத்தின் தலைப்பை தனது படத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது என்று மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விஷயத்தில் இரு தரப்பினரும் கலந்து பேசி சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்

எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்

இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில், களவாணி சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன், அதிதி பாலன் நடித்த எக்ஸாம் என்ற வெப்சீரியஸ், மே 15ல் ரிலீஸ் ஆகிறது. வெப்சீரிஸ் குறித்து சற்குணம்

மேலும் படிக்க

சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி

சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி

முன்னணி நடிகர்கள், பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்களுக்கு பண்டிகை நாட்கள் அல்லது சாதாரண நாட்களில் கூடுதலாக ஒரு காட்சி இயக்க தமிழக அரசு அனுமதி வழங்குவது வழக்கம்.

மேலும் படிக்க

பெத்தி படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை

பெத்தி படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை

ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு வந்தார். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் அதையடுத்து தற்போது புஜ்ஜி

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map