சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

என் ஐ.பி.எஸ்., கனவு நனவாச்சு: மனம் திறந்த ரித்திகா சிங்

என் ஐ.பி.எஸ்., கனவு நனவாச்சு: மனம் திறந்த ரித்திகா சிங்
Advertisement
எழுத்து அளவு

"ஆரம்பமே இறுதி சுற்று" ஆனால் அதில் தான் ஆரம்பித்தது இவரது நடிப்பு சுற்று... ரீலில் மட்டுமல்ல ரியலில் கூட ஏவுகணைகளாக தாக்கும் குத்துச்சண்டை, கனகச்சித கராத்தே வீராங்கனை, நடிப்பில் தெறிக்கும் துடிப்பு, ஆக் ஷன் காட்சிகளில் மிரட்டும் முறைப்பு... என "கொலை" படத்தில் போலீசாக நடித்த ரித்திகா சிங் பேசுகிறார்...

இறுதி சுற்று முதல் கொலை வரை உங்க திரை பயணம்
அஜித், தனுஷ், விஜய், துல்கர் கூட நடிக்கணும், பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போது கத்துக்கலாம். இந்த பயணத்தில் நிறைய பேர் கூட நடிக்கணும். இறுதி சுற்றில் நடித்த போது நல்ல கதையா நடிக்கணும்னு மாதவன் சொல்வாரு.

தென்னாப்பிரிக்கா கராத்தே சாம்பியன்ஷிப்...
உலக சாம்பியன் போட்டிகளில் 16 வயதில் பங்கேற்றேன். அதற்கு பின் தற்போது தான் பங்கேற்க போறேன். கொலை படப்பிடிப்பின் போதே பயிற்சியும் பண்ணினேன். பதட்டமா இருக்கு.

போலீஸ் உடையில் நடித்த அனுபவம்
என் கனவு நனவாகி இருக்கு. சின்ன வயசுல இருந்தே ஐ.பி.எஸ்., ஆபிசரா வரனும்னு ஆசை.. வர முடியலை. ஆனால், ஒரு நடிகை ஆன பிறகு, போலீஸ் கேரக்டரில் நடித்து சந்தோஷம். இயக்குனர் பாலாஜிக்கு நன்றி.

கொலை படம் பற்றி சொல்லுங்களேன்
100 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்காங்க. இந்த படத்துக்காக 10,000 சதுரடியில் வீடு கட்டி இருக்காங்க..100 மீட்டர், தார் ரோடு போட்டு இருக்காங்க. ஆர்ட் ஆறுசாமி, ஒளிப்பதிவு சிவா பண்ணிருக்காங்க.

நீங்களே டப்பிங் பேசி இருக்கீங்களா
நான் பேசலை... ஆனால், என் குரலில் பேசணும்னு ஆசை இருக்கு. இப்போ தெலுங்கு, தமிழ் கலந்து பேசுறேன். தமிழ் நல்லா பேச பழகிட்டு என் குரலில் சீக்கிரம் பேசுவேன்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை

உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை

தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை மிருணாள்

மேலும் படிக்க

30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா

30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா

தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, நடிப்புத் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி உருவான பல படங்களில்

மேலும் படிக்க

முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

சினிமா துறையிலிருந்து வந்து இன்று தமிழகத்தின் முதல்வராகி உள்ளார் நடிகர் விஜய். அவர் பொறுப்பேற்றது முதல் பல துறையை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map