சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த்

சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த்
Advertisement
எழுத்து அளவு


மு.மாறன் இயக்கும் "பிளாக்மெயில்" படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து இருக்கிறார் "ரோஜாக்கூட்டம்" ஸ்ரீகாந்த். அவர் ஜோடியாக பிந்துமாதவி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோ. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு, புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டாலும், ஸ்ரீகாந்த் கலந்து கொள்ளவில்லை.

போதை மருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக ஜெயிலுக்கு போய் ஜாமினில் வந்தவர், குற்ற உணர்வு, பயம் காரணமாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயங்குகிறார். ஜாமினில் வந்தவர் மற்ற பொது நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லை. அவர் சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஓடிவிட்டன.

கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை. கடந்த ஆண்டு அவர் நடித்த "தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்" என 2 படங்கள் வந்தன. இரண்டுமே பிளாப். அதனால், ஹீரோ அல்லாத ரோலில் அவர் நடிக்க ஆரம்பித்தார். அதற்குள் போதை பிரச்னையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார் என்கிறார்கள் கோலிவுட்டில்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்


ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!

ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!


எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு

எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map