அறுவை சிகிச்சைக்கு தயாராகும் சந்தீப் கிஷன்!
யாருடா மகேஷ், மாநகரம், கேப்டன் மில்லர், ராயன் என பல படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‛கூலி" படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கும் இவர், அடுத்தபடியாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தெலுங்கில் நடித்துள்ள ‛மஜாகா" என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் கிஷன், தனக்கு சைனஸ் பிரச்னை இருப்பதாகவும், கழுத்தைச் சுற்றி கடுமையான வலி இருப்பதாகவும் தெரிவித்தவர், இது மருந்துகளால் சரியாகாது என்பதினால் விரைவில் அறுவை சிகிச்சை செய்யப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது கைவசம் உள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அறுவை சிகிச்சை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு இது சைனஸ் சிறிய பிரச்னைதான். ஆனால் ஊடகங்கள் மிகப்பெரிய நோய் எனக்கு இருப்பது போல பெருசுப்படுத்தி என்னை பெரிய நோயாளி போன்று செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார் சந்தீப் கிஷன்.
கோலிவுட் செய்திகள்
தமிழ் சினிமாவில், ஏன் மொத்த இந்திய சினிமாவிலேயே ஆயிரம் படங்களில் நடித்தவர்கள் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலர் மட்டுமே. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களில்
கடந்த 2024ல் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில், பெரிய அளவில் அறிமுகம் இல்லாத நடிகர்களைக் கொண்டு உருவான வாழ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்திற்குத் தயாரிப்பாளரும்
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த காஞ்சனா படம் கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பிறகு 2015ல் காஞ்சனா 2, 2019ல் காஞ்சனா 3 படங்களையும் இயக்கி, நடித்து வெளியிட்டார் ராகவா






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.