கேரளா, பெங்களூருவில் தி கோட் சாதனை ரிலீஸ்
விஜய் நடித்துள்ள "தி கோட்" படம் நாளை செப்., 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே தமிழகம் தவிர, கேரளா மற்றும் பெங்களூருவில் பெரும் வரவேற்பு இருக்கும்.
கேரளாவில் மட்டும் இப்படம் சுமார் 700க்கும் அதிகமான தியேட்டர்களில் 4000-க்கும் கூடுதலான காட்சிகளில் திரையிடப்பட உள்ளதாக படத்தை அங்கு வெளியிடும் வினியோக நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அங்கு படத்திற்கு பெரும் வரவேற்பும், வசூலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் மட்டும் நாளை 100க்கும் அதிகமான தியேட்டர்களில் 1200க்கும் அதிகமான காட்சிகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திற்கும் இதற்கு முன்பு இவ்வளவு காட்சிகளில் படம் திரையிடப்பட்டது இல்லையாம். அங்கு தெலுங்கு டப்பிங் படமும் திரையிடப்படுகிறது. இதற்கு முன்பு இந்த வருடம் வெளியான "கல்கி 2898 ஏடி" படம் 1300க்கும் கூடுதலான காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது.
சென்னையில் கூட அவ்வளவு தியேட்டர்களில் "தி கோட்" படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. 30க்கும் அதிகமான தியேட்டர்களை மட்டுமே தங்களது இன்றைய போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கோலிவுட் செய்திகள்
அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி,
சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்





கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.