சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

அந்த வாத்தியார் போலவே இந்த வாத்தியாரும்... : கிர்த்தி ஷெட்டி

அந்த வாத்தியார் போலவே இந்த வாத்தியாரும்... : கிர்த்தி ஷெட்டி
Advertisement
எழுத்து அளவு

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி நடித்துள்ள ‛வா வாத்தியார்" படம் பல பிரச்னைகளை கடந்து இன்று வெளியாகி உள்ளது. சென்னையில் நடந்த இப்பட விழாவில் கிர்த்தி ஷெட்டி பேசியதாவது : ‛‛வா வாத்தியார் படம் ஒரு பெஸ்டிவல் படம் என்று இயக்குனர் நலன் சொன்னார். அது உண்மையாகிவிட்டது. பொங்கலுக்கு படம் வருகிறது. மக்கள் குடும்பத்தினருடன் வந்து படம் பார்ப்பார்கள். ஒரு சிலர் பட ரிலீஸ் லேட்டாகிவிட்டதே, நீங்க அப்செட் ஆகி விட்டீர்களா என்று கேட்டார்கள்.

நல்லது நடந்தால் அது கடவுள் பிளான் என்றுதான் நாம் சொல்வோம். அதுபோல் வேறு சில விஷயங்கள் நடந்தாலும் அதுவும் கடவுள் செய்வதுதான். ஆனால் முன்பை விட அவர் பெரிதாக, நல்லதாக நமக்கு செய்வார் என நான் நம்புகிறேன். வா வாத்தியார் படத்திலும் அதுவே நடந்து இருப்பதாக நினைக்கிறேன். இயக்குனர் நலனுக்கு இது கனவுப்படம், கண்டிப்பாக வெற்றி பெறும்.

நான் கார்த்தியின் பெரிய ரசிகை என்று எல்லாருக்கும் தெரியும். இந்த படத்துக்குபின் இன்னும் பெரிய ரசிகை ஆகிவிட்டேன். அவரின் தனிப்பட்ட குணம், நல்லது செய்யும் விஷயம் படத்துக்கு இந்த படத்தில் அவர் நடித்த வாத்தியார் கேரக்டருக்கு பொருந்தியிருக்கிறது. அந்த வாத்தியார் போலவே, இந்த வாத்தியாரும் பல குணங்களில் ஒத்து போய் இருக்கிறார். என்னுடைய முதல் நேரடி தமிழ் படம் இது"" என்றார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி

தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி

தமிழகத்தில் கும்பகோணத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்து மும்பையில் செட்டிலானவர் இயக்குனர் பால்கி. அவரது முழுப்பெயர் பாலகிருஷ்ணன், சுருக்கமாக பால்கி என வைத்துக் கொண்டார்.2007ல்

மேலும் படிக்க

கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி

கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் கருப்பு. இப்படம் நேற்று மே 14ம் தேதி

மேலும் படிக்க

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map