சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

இந்த வார ஸ்பெஷல் : ஓடிடியில் தரமான சம்பவம் இருக்கு...!

இந்த வார ஸ்பெஷல் : ஓடிடியில் தரமான சம்பவம் இருக்கு...!
Advertisement
எழுத்து அளவு

தியேட்டரில் வாரா வாரம் புதுப்படங்கள் வெளியாவது போன்று, ஓடிடியிலும் புதுப்படங்கள் வெளியாகின்றன. இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றால் ஆச்சரியமில்லை. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

யூத்
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் "யூத்". இந்த படத்தில் கென் கருணாஸே நாயகனாகவும் நடித்துள்ளார். அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளன. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலித்த நிலையில் இன்று(ஏப்.16ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

உஸ்தாத் பகத் சிங்
தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா, மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் வெளியான திரைப்படம் " உஸ்தாத் பகத் சிங். திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று(ஏப்.16ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

போச்சம்மா (Pochamma)
தெலுங்கு இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்கத்தில் வெளிவந்துள்ள வெப் தொடர் "போச்சம்மா (Pochamma)". கிராமப்புற பின்னணியில், நம்பிக்கை மற்றும் ஒரு பழைய பங்களாவின் சாபத்தை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நாளை(ஏப். 17ம் தேதி) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சம்பவம் அத்தியாயம் ஒண்ணு (Sambhavam Adhyayam Onnu)
மலையாள இயக்குநர் ஜித்து சதீசன் இயக்கத்தில் அஸ்கர் அலி, வினீத் குமார் மற்றும் சித்தார்த் பரதன் நடிப்பில் வெளியான திரைப்படம் "சம்பவம் அத்தியாயம் ஒண்ணு(Sambhavam Adhyayam Onnu)". கேரள - தமிழ்நாடு எல்லையில் உள்ள ஒரு காட்டில் காணாமல் போன போலீஸ் அதிகாரியைத் தேடிச் செல்லும் அதிகாரிகள், காலச் சுழற்சியில் சிக்கி மீண்டார்களா என்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நேற்று(ஏப்.15ம் தேதி) வெளியாகியுள்ளது.

ஆ கேங் ரேப்பு 3 (Aa Gang Repu 3)
தெலுங்கு இயக்குநர் யோகி குமார் இயக்கத்தில் ப்ரீத்தி சுந்தர், நரேன் அன்னசாகரம், சந்தீப் சாண்டில்யா மற்றும் தயானந்த் ரெட்டி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் "Aa Gang Repu 3". கூட்டுப் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் இன்று (ஏப்.16ம் தேதி) ஆஹா வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மா இன்டி கதா (Maa Inti Katha)
தெலுங்கு இயக்குநர் ஸ்ரவன் தாமுலூரி இயக்கத்தில் உருவாகியுள்ள பேமிலி ட்ராமா வெப் தொடர் "மா இன்டி கதா (Maa Inti Katha)". இத்தொடர் நாளை(ஏப்.17ம் தேதி) ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

கருப்பு ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா?

கருப்பு ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த கருப்பு படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தயாரிப்பாளர் ஏற்பட்ட மோதல்

மேலும் படிக்க

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே!

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே!

தற்போது அட்லி இயக்கும் ராக்கா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 23வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது

மேலும் படிக்க

ஜனநாயகன் பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்!

ஜனநாயகன் பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்!

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரியில் பொங்கல் தினத்தில் திரைக்கு வர இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்னை காரணமாக படத்தின் ரிலீஸ்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map