கோலிவுட்டில் நடந்த மூன்று திருமணங்கள்

கோலிவுட்டில் நடந்த மூன்று திருமணங்கள்
Advertisement
எழுத்து அளவு

தமிழ் சினிமாவில் இந்த வாரம் திருமண வாரம் என்றே சொல்லலாம். நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் - இந்து திருமணம் நேற்று(ஜூன் 9) திருத்தணியில் நடைபெற்றது. நடிகர் சார்லியின் மகன் அஜய் தங்கசாமி - பெர்மீசியா டெமி ஆகியோருக்கு நேற்று காலை சென்னை சாந்தோம் சர்ச்சில் திருமணம் நடந்தது. நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோருக்கு இன்று(ஜூன் 10) காலை சென்னை, கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனுக்குச் சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

சார்லி மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்து முடிந்தது. அதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரேம்ஜி - இந்து, உமாபதி - ஐஸ்வர்யா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. ஐஸ்வர்யா - உமாபதியின் திருமண வரவேற்பு ஜூன் 14ல் நடக்கிறது.

அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமாருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. அடுத்தடுத்த திருமண வைபவங்களால் கோலிவுட்டில் கல்யாணக் களை ஏற்பட்டுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

டிக்கெட் விலை அதிகரிக்கணும் : விஜய்சேதுபதிக்கு கண்டனம்

டிக்கெட் விலை அதிகரிக்கணும் : விஜய்சேதுபதிக்கு கண்டனம்

சமீபத்தில் நடந்த பரிமளா அண்ட் கோ பட விழாவில் சினிமா தியேட்டரில் டிக்கெட் விலை அதிகரித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை அதிகரிக்கணும். அதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று


இந்த வாரம் சில படங்கள் மட்டுமே ரிலீஸ்….

இந்த வாரம் சில படங்கள் மட்டுமே ரிலீஸ்….

கோடை விடுமுறையும், ஐபிஎல் போட்டிகளும் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. இந்த வருட கோடை விடுமுறையை சூர்யா நடித்து வெளிவந்த கருப்பு படம் மட்டுமே சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அப்படம்


பிளாஷ்பேக் : தியேட்டரில் வெளியாகாத பாலுமகேந்திரா படம்

பிளாஷ்பேக் : தியேட்டரில் வெளியாகாத பாலுமகேந்திரா படம்

1989ம் ஆண்டு பாலு மகேந்திராவால் தயாரிக்கப்பட்டு, எழுதப்பட்டு, இயக்கப்பட்ட படம் சந்தியாராகம். அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர் மற்றும் ஓவியர் சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில்


பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ்

பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ்

தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். சேலத்தை தலைமையிடமாக கொண்டு 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தது. இதன் நிறுவனர் டி.வி.சுந்தரம் வெளிநாட்டில்


ரிலீசுக்கு தயாரான ரோபோ சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம்

ரிலீசுக்கு தயாரான ரோபோ சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் ரோபோ சங்கர். காமெடியானாக ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக கதை நாயகனாக நடித்த படம் ஈகோ ராமன்.இதில் அவருடன் சிபி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map