‛பார்ட் 2 கேட்ட உதயநிதி - கிருத்திகா சொன்ன பதில்
வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி தற்போது பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் ஜி-5 ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகி இருக்கிறது. காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த தொடருக்கு சைமன் கே. கிங்ஸ் இசை அமைத்திருக்கிறார். கிருத்திகா உதயநிதியின் இந்த வெப் தொடரை வாழ்த்தி அவரது கணவரான உதயநிதி ஸ்டாலின் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், எனது டைரக்டர் கிருத்திகாவின் பேப்பர் ராக்கெட் வெப் தொடருக்கு வாழ்த்துக்கள். இது உன்னுடைய சிறந்த படைப்பு. இதை எழுதியுள்ள விதமும், திரையில் கொண்டு வந்துள்ள விதமும் சூப்பராக உள்ளது. பேப்பர் ராக்கெட் குழுவுக்கு வாழ்த்துக்கள். இரண்டாவது சீசனுக்காக காத்திருக்கிறேன் என்று கூறினார்.
இதற்கு கிருத்திகா, ‛‛அப்படியென்றால் என்னை ஒரு டிரிப்பிற்கு கூட்டி செல்லுங்கள். அது பேப்பர் ராக்கெட் சீசன் 2வாக இருக்கும்"" என்றார்.
கோலிவுட் செய்திகள்
அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி,
சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.