ஹாட்ரிக் தோல்வியில் விஜய் சேதுபதி - ரசிகர்கள் அட்வைஸ்

ஹாட்ரிக் தோல்வியில் விஜய் சேதுபதி - ரசிகர்கள் அட்வைஸ்
Advertisement
எழுத்து அளவு

தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பிடித்தவர் விஜய் சேதுபதி. சின்னச்சின்னக் கதாபாத்திரங்களில் நடித்தவர் "தென்மேற்கு பருவக்காற்று" படத்தில் தனி நாயகனாக நடித்து கவனம் பெற்றார். அதன்பின் அவர் நாயகனாக நடித்து 2012ல் வெளிவந்த "பீட்சா" படம் அவருக்கு பெரிய திருப்புமுனையைப் பெற்றுத் தந்தது.






அதன்பின் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா" என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்தடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தார். அதன்பிறகு, கடந்த சில வருடங்களில் அதிகப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜய் சேதுபதி.






2018ல் வெளிவந்த "96" படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிய வெற்றயைப் பெறவில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் விஜய் நடித்த "மாஸ்டர்" படத்தில் வில்லனாகத்தான் நடித்திருந்தார். அப்படத்தில் கூட அவரது வில்லத்தன நடிப்பு அதிகம் பேசப்பட்டது.






அந்தப் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து கடந்த பத்து நாட்களில் "லாபம்" படம் தியேட்டரிலும், "துக்ளக் தர்பார்" படம் டிவியிலும், "அனபெல் சேதுபதி" படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படங்களைப் பற்றி விமர்சகர்கள் விமர்சித்ததை விட ரசிகர்கள் மிகக் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தார்கள்.






விஜய் சேதுபதிக்கு என்ன ஆச்சு, ஏன் இது மாதிரியான படங்களில் அவர் நடிக்கிறார். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தவில்லையா என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மூன்று படங்களிலுமே அவருடைய நடிப்பு சரியில்லை என்பதே ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. இதெல்லாம் விஜய் சேதுபதி கவனிப்பாரா, அல்லது அவர் போக்கில் செல்வாரா?. விஜய் சேதுபதி நடித்துள்ள "கடைசி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர்," படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது.


Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map