விஜய் சேதுபதியின் ஆச்சரிய முடிவு ?
சினிமா உலகில் பல விசித்திரங்கள் நடப்பது உண்டு. தங்களுக்கு மகளாக சிறு குழந்தையாக நடித்தவர்கள், வளர்ந்து கதாநாயகியான பிறகு அவர்களுடன் ஜோடியாக நடித்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதி அதிலிருந்து மாறுபட்டு ஒரு முடிவு எடுத்துள்ளதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் "உப்பெனா" என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். சூப்பர் ஹிட்டான அந்தப் படத்தில் கிர்த்தி ஷெட்டி என்ற அறிமுக நடிகை விஜய் சேதுபதியின் மகளாக நடித்தார்.
தமிழில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்திற்காக கிர்த்தி ஷெட்டியை அவரது ஜோடியாக நடிக்க வைக்க பேசி வைத்திருந்தார்களாம். ஆனால், அது பற்றி கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன். வேறு கதாநாயகியைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டாராம். இது பற்றி கேள்விபட்ட கிர்த்தி ஷெட்டி அதிர்ச்சியடைந்தாராம்.
இருந்தாலும் விஜய் சேதுபதியின் இந்த முடிவு டோலிவுட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளதாம். இப்படியும் ஒரு நடிகர் இருப்பாரா என்று கேட்கிறார்களாம்.
கோலிவுட் செய்திகள்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த கருப்பு படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தயாரிப்பாளர் ஏற்பட்ட மோதல்
தற்போது அட்லி இயக்கும் ராக்கா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 23வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரியில் பொங்கல் தினத்தில் திரைக்கு வர இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்னை காரணமாக படத்தின் ரிலீஸ்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.