தமிழ் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி
உலக அளவில் பல நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் நிகழ்ச்சி "மாஸ்டர் செப்". இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரான்க் ரோட்டம் என்பவரது எண்ணத்தில் உருவான நிகழ்ச்சி இது. 1990ம் ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி, பின்னர் 2005ம் ஆண்டு சில மாற்றங்களுடன் பிபிசி டிவியில் ஒளிபரப்பானது.
தற்போது உலகம் முழுவதும் 40 நாடுகளில் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தமிழில் ஒரு முன்னணி டிவியில் விரைவில் இந்த நிகழ்ச்சி தனது ஒளிபரப்பை ஆரம்பிக்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கெனவே இதே டிவியில் "நம்ம ஊரு ஹீரோ" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான "குத் வித் கோமாளி" நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களுக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அது போல "மாஸ்டர் செப்" நிகழ்ச்சிக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கோலிவுட் செய்திகள்
இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில், களவாணி சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன், அதிதி பாலன் நடித்த எக்ஸாம் என்ற வெப்சீரியஸ், மே 15ல் ரிலீஸ் ஆகிறது. வெப்சீரிஸ் குறித்து சற்குணம்
முன்னணி நடிகர்கள், பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்களுக்கு பண்டிகை நாட்கள் அல்லது சாதாரண நாட்களில் கூடுதலாக ஒரு காட்சி இயக்க தமிழக அரசு அனுமதி வழங்குவது வழக்கம்.
ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு வந்தார். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் அதையடுத்து தற்போது புஜ்ஜி
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.