சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பிரச்சனை தீர்ந்து வெளியாகுமா பிரதர்?

பிரச்சனை தீர்ந்து வெளியாகுமா பிரதர்?
Advertisement
எழுத்து அளவு

தீபாவளித் திருநாளான அக்டோபர் 31ம் தேதி "அமரன், ப்ளடி பெக்கர், பிரதர்" ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்த மூன்று படங்களுக்குமே முன்பதிவு ஆரம்பமாகி நடந்து வருகிறது.

இந்நிலையில் "பிரதர்" படத்தை வெளியிடக் கூடாது என பிரபல பாலிவுட் வினியோக நிறுவனமான கோல்டுமைன் நிறுவனம் மும்பை நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த நிறுவனத்திடமிருந்து "பிரதர்" தயாரிப்பு நிறுவனமான ஸ்க்ரீன் சீன் நிறுவனம் 7 கோடி ரூபாயைப் பெற்றிருந்தார்களாம். அதற்கான வட்டியுடன் சேர்த்து 21 கோடி ரூபாயைத் தர வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தடை உத்தரவுக்குப் பிறகு ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தினர் மும்பை சென்று கோல்டுமைன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். வட்டித் தொகையை பெருமளவில் குறைத்தால் பணத்தைத் தந்துவிடுகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். சுமார் 10 கோடிக்கு பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல். அந்தப் பணத்தை உடனடியாகத் தந்துவிட்டால் "பிரதர்" திட்டமிட்டபடி வெளியாகும். இல்லையென்றால் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது என்பது கோலிவுட் தகவல்.

இதனிடையே, "பிரதர்" படக்குழுவினர் இன்று மதியம் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளார்கள். அப்போது படத்தின் டிரைலரும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,

மேலும் படிக்க

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி,

மேலும் படிக்க

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map