இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்?
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ருக்மிணி வசந்த். தமிழில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த "ஏஸ்" படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. பெரும் எதிர்பார்ப்பில் தமிழில் அறிமுகமானவருக்கு முதல் படத்தில் ஏமாற்றம்தான் கிடைத்தது.
அவரது இரண்டாவது தமிழ்ப் படமான "மதராஸி" இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம். டிரைலரைப் பார்த்த போது ருக்மிணிக்கும் படத்தில் முக்கியத்துவம் அதிகமாகவே உள்ளது தெரிகிறது.
முதல் படத் தோல்வியை மறக்கும் விதத்தில் "மதராஸி" வெற்றி அவருக்கு அமைந்தால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் தேடிப் போகும். கன்னடத்தில் உருவாகி அக்டோபர் 2ல் வெளியாக உள்ள "காந்தாரா சாப்டர் 1", தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் "ட்ராகன்" படத்திலும், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் "டாக்சிக்" படத்திலும் ருக்மிணி வசந்த் தான் கதாநாயகி. அப்படங்களுக்குப் பிறகு அவர் பான் இந்தியா நடிகையாக மாறிவிடுவார்.
கோலிவுட் செய்திகள்
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழுவின் முன் ஆய்வில் உள்ளது. இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 3ம் தேதி சட்ட விரோதமாக இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியானது.
இந்தியத் திரையுலகம் தற்போது ஒரு நிலையற்ற சூழலில்தான் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகும் படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே வியாபார
நடிகர் ரவி மோகன் அவரது காதல் மனைவி ஆர்த்தி ஆகியோர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்தனர். அதன்பின் ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸ் இருவரும் லிவிங் டு கெதர் ஆக வாழ்ந்து வந்ததாக






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.