காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில்

காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில்
Advertisement
எழுத்து அளவு

கன்னடத்தில் உருவாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 2022ல் வெளியான ‛காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கி, நாயகனாகவும் நடித்தார். நாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1" உருவாகி வருகிறது. அதாவது காந்தாரா படத்தின் முந்தைய கதைகளத்தில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சிலமாதங்களாக நடந்து வருகிறது. இப்படம் வரும் அக்., 2ம் தேதி வெளியீடு என ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.

இதன் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்றும், ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகவும் வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக ரிஷப் ஷெட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛காந்தாரா சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி சரியாக செல்கிறது. எங்களை நம்புங்கள், வதந்திகளை நம்பாதீர். சொன்னபடி அக்., 2ல் படம் வெளியாகும்"" என தெரிவித்துள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள் : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள்

முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள் : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள்


தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா?

தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா?


புருஷன் படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்!

புருஷன் படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்!

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map