புது கெட்டப்பில் கெத்தாக போஸ் கொடுக்கும் புகழ்
எழுத்து
அளவு
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலமான நபர்களில் ஒருவர் புகழ். இன்று, திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் 1947 படத்தில் அவரது நடிப்பு அதிகமான பாராட்டுகளை பெற்றது. தற்போது "மிஸ்டர் ஜூ கீப்பர்" படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புகழ், தனது ஹேர்ஸ்டைலை மாற்றி கோட் சூட் உடையுடன் கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த கெட்டப்பில் புகழை பார்க்கும் ரசிகர்கள் இனி காமெடி தாண்டிய ரோல்களிலும் புகழ் நடிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.