சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

வருணை பழிவாங்க துடிக்கும் அக்ஷரா : வைரலாகும் காமெடி வீடியோ

வருணை பழிவாங்க துடிக்கும் அக்ஷரா : வைரலாகும் காமெடி வீடியோ
Advertisement
எழுத்து அளவு

பிக்பாஸ் சீசன் 5-ல் விளையாடிய போட்டியாளர்களில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றால் அது அக்ஷராவும், வருணும் தான். இருவரும் காதலிக்கிறார்களோ என பார்ப்பவர்கள் சந்தேகிக்கும் வகையில் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், அக்ஷரா வருணை கண்டிப்பாக பழிவாங்குவேன் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வருணும், அக்ஷராவும் சமீபத்தில் சந்தித்து கொண்ட போது வருண், அக்ஷரா மீது கலரை பூசி விளையாடியிருக்கிறார். அந்த கறை அக்ஷராவின் தலையிலும், காஸ்ட்லியான காரிலும் ஒட்டிக்கொண்டது. எவ்வளவு கழுவினாலும் அந்த கறை போகவில்லை. இதனால் வருண் மீது கோபம் கொண்ட அக்ஷரா, "எனக்கு வீணா போன ஒரு ப்ரண்ட் இருக்கான். அவன் பேரு வருண். சும்மா இருந்தவள வாக்கிங் போலாம்னு கூட்டிட்டு போயிட்டு கலரை பூசிட்டான். போகவே மாட்டேங்குது. வருண் நான் உன்னை சும்மா விடமாட்டேன். ஐ ஹேட் யூ. கண்டிப்பா உன்னை பழி வாங்குவேன்" என அதில் பேசுகிறார்.

அத்துடன் வருண் கலர் பூசிய வீடியோவை வடிவேல் காமெடியுடன் மீம் வீடியோவாக இணைத்து வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு செம காமெடியாக இருக்கும் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக

மேலும் படிக்க

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்

மேலும் படிக்க

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map