இரண்டு திருமணம் வாழ்க்கையும் தோல்வி! சோகத்தில் பானுமதி

இரண்டு திருமணம் வாழ்க்கையும் தோல்வி! சோகத்தில் பானுமதி
Advertisement
எழுத்து அளவு

சின்னத்திரை நடிகையான பானுமதி அண்ணா, இனியா, சின்ன மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், தனது கடந்த கால சோக வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் பேசிய பானுமதி, "எனக்கு 16 வயதிலேயே திருமணம் முடிந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். என் கணவர் அதிகமாக குடித்து மஞ்சள் காமலை நோயால் உயிரிழந்தார். ஆனால், கணவரது வீட்டார் நான் அவரை கொன்றுவிட்டதாக கூறினார்கள். அதன்பின் அவர்கள் உறவே வேண்டாம் என்று பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

குடும்பத்திற்காக சீரியல்களில் துணை நடிகையாக 500 ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஆரம்பித்தேன். குழந்தைகளுக்காக இரண்டாவது திருமணம் செய்தேன். அந்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. அதன்பிறகு மீண்டும் குடும்பத்திற்காக ஓட ஆரம்பித்தேன். எனது மகன்களை தற்போது நல்லபடியாக வளர்த்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். அவரது சோகக்கதை ரசிகர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்


தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்


ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map