உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ்
டிக் டாக் பிரபலமான கேப்ரில்லா செல்லஸ் நடிப்பின் மீது தீராத காதல் கொண்டவர். மைம் ஆக்டிங்கில் எப்போதும் எதையாவது கருத்தை வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருப்பார். தமிழ் சினிமாவில் காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சுந்தரி சீரியலில் மெயின் லீடாக நடித்து கலக்கி வருகிறார். டிஆர்பியில் டாப் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வரும் இந்த சீரியலில் கேப்ரில்லாவின் நடிப்புக்கென்றே ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பல்வேறு கஷ்டங்களை சமாளித்து இன்று ஒரு நடிகையாக விருதுகளையும் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
சீரியல், சினிமா என்பதை தாண்டி கேப்ரில்லா நாடக்குழு ஒன்றையும் நிறுவி உள்ளார். சொந்தமாக முழுநீள மெளன நாடகம் தயாரிப்பதை இலக்காக கொண்டு பயணித்து வருகிறார். இந்நிலையில், கடற்கரையில் உள்ள பலூன் சுடும் விளையாட்டில் அனைத்து பலூன்களையும் ஒவ்வொன்றாக மொத்தமாக சுட்டு முடிக்கும் கேப்ரில்லா, அதற்கு பொருத்தமாக "உன்னோட குறிக்கோள் சரியா இருந்தா போதும் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் உனக்கானது தான்" என மோட்டிவேஷ்னலாக வீடியோ ஒன்றை தனது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.