அசீமை சைக்கோ என திட்டிய காஜல் பசுபதி

அசீமை சைக்கோ என திட்டிய காஜல் பசுபதி
Advertisement
எழுத்து அளவு

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 78 நாட்கள் முடிந்துவிட்டது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறி உள்ள நிலையில், 9 போட்டியாளர்கள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி விளையாடி வருகிறார்கள். இந்த 9 நபர்களில் பிக்பாஸ் வீட்டில் இருக்க கொஞ்சம் கூட தகுதியேயில்லாத நபர் என்றால் அது அசீம் தான் என ரசிகர்கள் பலரும் சொல்லி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்தே ஒவ்வொருவரையாக டார்க்கெட் செய்து சண்டையிட்டு, தனது அதிகார தொணியை குறிப்பாக பெண்களிடத்தில் அதிகம் காட்டி வந்தார். இது ரசிகர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை. ஆனால், இவ்வளவு வெறுப்பை சம்பாதித்தும் அசீம் எப்படி எல்லா எவிக்சனிலிருந்தும் தப்பித்து வருகிறார் என்பது பிக்பாஸுக்கு மட்டுமே வெளிச்சம். அசீமும் சமீபத்திய எபிசோடுகளில் நான் தான் டைட்டில் வெல்வேன் என ஓவர் கான்பிடன்ஸில் பேசி வருகிறார்.

இந்நிலையில், அசீம் குறித்து முன்னாள் போட்டியாளர்/நடிகை காஜல் பசுபதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கடுமையாக சாடியுள்ளார். அவரது பதிவில், "உனக்கெல்லாம் ஜெயிக்க வாய்ப்பே இல்ல தம்பி. ஏன்னா நீயெல்லாம் ஜெயிச்சா தவறான உதாரணமாகிடும்டா சைக்கோ முட்டாள்" என பதிவிட்டுள்ளார். காஜலின் இந்த பதிவுக்கு பலரும் தங்கள் ஆதரவினை தெரிவிப்பதோடு அசீம் குறித்து சக நடிகர் நடிகைகள் பேசிய பேட்டி வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map