சூர்யாவின் முதல் 300 கோடி, அப்படியே தொடர்வாரா...?

சூர்யாவின் முதல் 300 கோடி, அப்படியே தொடர்வாரா...?
Advertisement
எழுத்து அளவு

சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த "கருப்பு" திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சூர்யாவுக்கு முதலாவது 200 கோடியைக் கடந்த வாரம் பெற்றுத் தந்த இந்தப் படம் தற்போது முதலாவது 300 கோடியைப் பெற்றுத் தந்துள்ளது. இப்படி ஒரு சாதனையைப் பெற சூர்யாவுக்கு 29 வருடங்கள் ஆகியிருக்கிறது.

2012ல் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் கூட 12 வருடங்களில் 2024ல் வெளிவந்த "அமரன்" படம் மூலம் 300 கோடி சாதனையைப் படைத்துவிட்டார். ஆனால், சூர்யாவுக்கு அதை விட இரண்டு மடங்கு வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு சாதனை இத்தனை வருடங்களுக்குப் பிறகு கிடைத்ததை சூர்யா தொடர்ந்து காப்பாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். விஜய் சினிமாவை விட்டு விலகிய நிலையில் அவரது வசூல் களம் வெற்றிடமாகிவிட்டது. சிறப்பான கமர்ஷியல் படங்களை யார் கொடுக்கிறார்களோ அவர்கள் அந்தக் களத்தில் முந்துவார்கள். இப்போதைக்கு சூர்யா முதல் ஆளாக களத்தில் நுழைந்துள்ளார். அதைத் தொடர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map