சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

ஆமா என்ன விட சின்னவர் தான் - சூப்பர் சிங்கர் மாளவிகா போட்டுடைத்த ரகசியம்

ஆமா என்ன விட சின்னவர் தான் - சூப்பர் சிங்கர் மாளவிகா போட்டுடைத்த ரகசியம்
Advertisement
எழுத்து அளவு

சூப்பர் சிங்கர் பிரபலமான மாளவிகா சுந்தர், தன்னுடைய காதலர் தன்னை விட வயதில் சிறியவர் என்பதை வெளிப்படையாக கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் முக்கியமாக திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8-வது சீசனும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் பாடகி மாளவிகா சுந்தரும் ஒருவர். இவர் விஜய் டிவியின் மற்றொரு நிகழ்ச்சியான சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும், அதேபோல் ஹிந்தியில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு புகழடைந்தார்.

சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள மாளவிகா அவ்வப்போது லைவ்வில் வந்து ரசிகர்களுடன் உரையாடுவார். மாளவிகா சுந்தருக்கு விரைவில் திருமணமாகவுள்ள நிலையில் சமீபத்தில் லைவ்வில் வந்த அவரிடம் அவரது காதலர் குறித்தும் திருமணம் குறித்தும் பல ரசிகர்கள் கேள்விகள் கேட்டனர்.

அதற்கெல்லாம் பதிலளித்துள்ள மாளவிகா, "என்னை விட எனது காதலர் ஒரு வயது சிறியவர். எனக்கு 33 அவருக்கு 32" என்று கூறினார். மேலும் "பெண்ணை விட பையன் வயது அதிகமான இருக்க வேண்டும் என்பதெல்லாம் பிரச்சனை கிடையாது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலிக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும்" என விளக்கமளித்துள்ளார். தற்போது மாளவிகா சுந்தர் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக

மேலும் படிக்க

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்

மேலும் படிக்க

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map