சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
Advertisement
எழுத்து அளவு


வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். "மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி" உள்பட பல்வேறு படங்களில் நடித்து திறமையால் உயர்ந்த "மைம் கோபி" நம்முடன் பகிர்ந்தது...

பிறந்து, வளர்ந்தது சென்னை. 37 பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தேன். சிறு வயதில் தந்தையை இழந்ததால் அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டே வளர்ந்தேன்.

கல்லுாரி படிக்கும் போது "மைம்" கற்றுக்கொடுக்கும் குரு மாலிக் அறிமுகம் கிடைத்தது. மைம் என்பது வசனம் பேசாமல், உடல் அசைவுகள், சைகைகள், முக பாவனை வழியாக கதை சொல்லும் கலை. இக்கலையை அவரிடம் கற்றுக்கொண்டு வாழ்க்கை துவங்கியது. இந்த கலையில் தேசிய, இன்டர்நேஷனல் அளவில் வெற்றி பெற்றோம்.

பின் கார்ப்பரேட் ஊழியர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு ஆளுமை வளர்ச்சி, தனியார் பள்ளிகளுக்கு மைம் கற்றுக்கொடுத்தோம். 1995ல் மைம் என தெரியாமல் ஆரம்பித்து 1997ல் தெரிந்து கொண்டு, 1999ல் இருந்து தற்போது வரை நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இந்த கலை சினிமா வாய்ப்பு கிடைக்க உதவியது.

சினிமாவில் எனது முதல் படம் "ஆடாத ஆட்டம் எல்லாம்". பெரிய கதாபாத்திரம் இல்லை. அதன் பின் "கண்ணும் கண்ணும்" படத்தில் நடிப்பு சரியாக வரவில்லை என இயக்குனர் தெரிவித்தார். சினிமாவில் இருந்து 3 ஆண்டுகள் விலகினேன்.

நடிப்பை கற்றுக்கொள்ள மைம், சினிமா இரண்டையும் கற்றுக்கொண்டேன். மைம் நடிக்கும் போது முகபாவனை வந்து விடும், ஆனால் வசனத்துடன் கூடிய முகபாவனை சினிமாவில் தேவைப்பட்டது. இதை கற்றுக்கொண்டு சினிமாவிற்குள் வந்த போது கிடைத்த படம் மெட்ராஸ்.

இப்படத்தில் இடைவேளைக்குள் நான் இறப்பேன் எனத் தெரியாது. இடைவேளையில் எனது பெருமாள் கதாபாத்திரம் இறந்த போது அனைவரும் கைத்தட்டினர். அதன் பின் மாரி, மாயா, கபாலி, விஸ்வாசத்தில் நடித்தேன்.

கபாலியில் நடிகர் ரஜினி முன்னால் நடிக்கும் போது பயமில்லாமல் நடித்தேன். இதை பார்த்து அவரே வியப்படைந்து என்னிடம் எப்படி இது போன்று நடிக்கிறீர்கள் என கேட்டார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.

சினிமாவில் ஒரு நடிகன் தண்ணீர் போல இருக்க வேண்டும். அப்போது தான் கதாபாத்திரமாக மாறி எளிதாக நடிக்க முடியும். இரு கதாபாத்திரங்கள் நன்றாக இருக்கும். ஒன்று ஹீரோ, மற்றொன்று வில்லன்.

ஹீரோவாக நடிப்பவர்கள் அழகு, உடற்பயிற்சி உள்பட நிறைய விஷயங்கள் உள்ளது. வில்லனிற்கு அப்படி கிடையாது, அதிகமாக நடிக்க வேண்டும். வில்லன் கதாபாத்திரத்தில் கெட்டவனாக காட்ட வார்த்தை, உடல் பாவனை மாற்ற வேண்டும்.

தற்போது "பித்தன்" படத்தில் ஹீரோ என்பதை விட கதை நாயகனாக நடிக்கிறேன். சினிமாவில் நடிப்பவர்களுக்கு பாக்கியம் உண்டு. சூட்டிங் செல்லும் அனைத்து இடங்கள், இயற்கை அழகை பார்க்க முடியும். தெலுங்கில் "ராபின் ஹூட்" படத்திற்கு ஒடிசா மலை உச்சியில் சூட்டிங். வெளியே பார்க்கும் போது மலை உச்சி. ஆனால் மலை மீது இரவு தங்கி சூட்டிங் எடுத்த போது அழகாக இருந்தது.

குலு மணாலியில் சூட்டிங்கிற்கு சென்ற போது மைனஸ் 7 டிகிரி செல்சியஸ், பின் மைனஸ் 15 டிகிரி வரை சென்றது. இது போன்று எல்லா சூழ்நிலைகளிலும் பணிபுரியும் வாய்ப்பு சினிமாவில் மட்டுமே கிடைக்கும்.

சினிமாவை தாண்டி கோயில், சித்தர் பீடங்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று தியானம் செய்வது பிடித்தமான ஒன்று. மைம் சூப்பர் மீடியம். சாப்டீங்களா என எந்த மொழியிலும் பாவனையில் கேட்டால் ஒன்று தான். பாவனையை பிடித்து விட்டால் சினிமாவில் நடிப்பது எளிது. சென்னையில் "ஜி மைம் ஸ்டுடியோ" துவங்கி நடத்தி வருகிறேன். இங்கிருந்து ஆண்டுக்கு 400 பேர் கற்றுக்கொண்டு வெளியேறுகின்றனர்.

சினிமா மட்டும் அல்ல, எந்த தொழில் செய்தாலும் பயிற்சி முக்கியம். சினிமாவில் கதாபாத்திரங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு தகுந்தாற் போல பயிற்சி தொடர்ந்து எடுத்துக்கொண்டால் சாதிக்க முடியும். சினிமாவில் ஒரு நடிகன் தண்ணீர் போல இருக்க வேண்டும். அப்போது தான் கதாபாத்திரமாக மாறி எளிதாக நடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
முந்தையது
அடுத்தது
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்

மேலும் படிக்க

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்

மேலும் படிக்க

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map