சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

சின்னத்திரையில் பார்த்திபன்

சின்னத்திரையில் பார்த்திபன்
Advertisement
எழுத்து அளவு

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்ட பார்த்திபன் சின்னத்திரையில் கால் பதிக்கிறார். இதற்கு முன் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர் இப்போது ஒரு நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அடுத்து தொகுப்பாளராக களம் இறங்குகிறார்.

தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் "பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்" என்ற நிகழ்ச்சியை செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் ஸ்டார் விஜய் சேனலில் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், ""பொதுவாக கொலை குற்றங்களை செய்ய உடந்தையாக இருப்பவர்களுக்கு அதிக தண்டனை. அதேபோல் நல்லது செய்யத் தூண்டுபவர்களுக்கு புண்ணியம் அதிகம். அந்தவகையில் அதிக புண்ணியம் எனக்கு கிடைக்கும் என்பதால் தான் இதற்கு ஒத்துக் கொண்டேன்.
அப்துல் கலாமுக்கும் எனக்கும் இடையே நிறைய உணர்வுப்பூர்வமான அன்பு இருக்கிறது. நடிகர் விவேக்கை அதிகம் "மிஸ்" செய்கிறேன். ஒருவேளை விவேக் உயிருடன் இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சியை அவரைத்தான் செய்ய சொல்லியிருப்பேன்.

சினிமாவே ஒரு மிகப்பெரிய அறிவியல் அதிசயம் தான். அதில் சாதிக்க நினைத்து பல இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். எனக்கு அறிவியல் பெரிதாக தெரியாது. ஆனால் அறிவியல் உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்"" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக

மேலும் படிக்க

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்

மேலும் படிக்க

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map