சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ ஸ்வாதி

59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ ஸ்வாதி
Advertisement
எழுத்து அளவு


மலையாளக் கரையோரம் பிறந்து, கொஞ்சும் தமிழ்ப் பேச்சு, நடிப்பால் கேரளா, தமிழகத்தின் இளசுகளை கவர்ந்து வரும் இளம் நாயகி. அழகியலின் அத்தனை அம்சங்களையும் கொண்ட தேவ மங்கை, நடிகை ஸ்வாதி அளித்த பேட்டி...

கேரள மாநிலம் ஆலப்புழா நுார்நாடு சொந்த ஊர். அப்பா ஷாஜி, ஓட்டல் ஷெப். அம்மா தேவிபிள்ளை. மலையாள சினிமாக்களில் குணச்சித்திர நடிகை. 3 வயதில் நடிக்க வந்துவிட்டேன். மலையாள சீரியலில் என் முதல் நடிப்பு பயணம் துவங்கியது. "வீணா" உள்ளிட்ட குறும்படங்கள், "சம்மர் லவ்" உள்ளிட்ட மியூசிக் ஆல்பங்கள் என நடிப்பு வாய்ப்புகள் வரிசை கட்டின. மலையாளத்தில் "பிரைஸ் ஆப் தி போலீஸ்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன்.

மலையாள மக்களை ஈர்த்த "செம்பருத்தி" மெகா சீரியல் என்னை ஒவ்வொரு வீடுகளிலும் தெரிய வைத்தது. அதே பெயரிலேயே தமிழில் அந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டது. அதன் மூலம் தமிழில் அறிமுகம் கிடைத்தது. தமிழில் நடிகர் "மைக்" மோகனின் "ஹாரா" படத்தில் அவருக்கு மகளாக நடித்தேன். என்னை சுற்றியே கதை அமைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து "ஆத்ம காதல்" படத்தில் 2ம் கதாநாயகியாக நடித்தேன். தற்போது சுப்பன், "வெள்ளைக்குச்சி" உட்பட தமிழில் 4 படங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.

"ஹாரா" படத்தில் நடிக்கும் போது எனக்கு தமிழ் பேசத் தெரியாது. தமிழில் தான் பேச வேண்டும் என இயக்குநர் கண்டிஷன் போட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் என்னிடம் தமிழில் பேச வைத்தார். ஷூட்டிங் நடந்த 59 நாட்களில் தமிழை நன்றாக பேசக் கற்றுக்கொண்டேன். இது என் நடிப்பு பயணத்திற்கு திருப்புமுனையாக மாறியது.

இப்போது தமிழில் தான் அதிக படங்களில் சான்ஸ் கிடைக்கிறது. மாடலிங், விளம்பர படங்களில் நடிக்கிறேன். என் லட்சியம் ஐ.ஏ.எஸ்., ஆவது. தற்போது பிளஸ் 1 படிக்கிறேன்.

நடிப்பையும், படிப்பையும் பேலன்ஸ் செய்துகொள்கிறேன். நடிப்புக்காக படிப்பு நாட்களை தியாகம் செய்யும்போது அந்த நாட்களில் நடத்திய பாடங்களை "நோட்ஸ்" கொடுத்து என் தோழிகள் எனக்கு உதவுகின்றனர். நடிப்பிற்கு என் பெற்றோர் முதல் பள்ளி நிர்வாகம் வரை ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.

தமிழகத்தில் தான் அதிக படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளேன். தமிழர்கள் கலாசாரம், மரியாதையாக நடந்துகொள்ளும் விதம் எனக்கு பிடித்துவிட்டது. பிடித்துவிட்டால் ரசிகர்கள் கண்மூடித்தனமாக கொண்டாடுவது நடிகைகளுக்கான "கிப்ட்".

தமிழ் ரசிகர்களை நம்பி மலையாள தேசத்தில் இருந்து ஏராளமான நடிகர்கள் வருகின்றனர். அந்த வரிசையில் நானும் ஒருவர். இதுவரை "சென்டிமெண்ட்" கேரக்டர்கள் தான் பெரும்பாலும் கிடைத்துள்ளது. எனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் என் திறமையை வெளிப்படுத்துவேன். சவாலான கதாநாயகி கேரக்டர் எதிர்பார்க்கிறேன். நிச்சயம் ஒரு "ரவுண்ட்" வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட

மேலும் படிக்க

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்

மேலும் படிக்க

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map