முடிவுக்கு வந்த மீனாட்சி பொண்ணுங்க : ஹீரோ ஆர்யன் போட்ட பதிவு
ஜீ தமில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய தொடர்களில் ஒன்று மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடரின் ஆரம்பத்தில் மூத்த நடிகை அர்ச்சனா டைட்டில் ரோலில் நடித்து வந்தார். இதனால் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் இடையிலேயே விலகிவிட அதனை தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த மோக்ஷிதாவும் விலகினார். இந்த தொடரானது தற்போது ஒருவழியாக கிளைமாக்ஸை எட்டியுள்ளது. இதனை அந்த தொடரின் நாயகன் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். வெற்றியாக அவர் நடித்துள்ள மானிட்டர் காட்சியை பதிவிட்டு "ஐ மிஸ் ஹிம் சோ பேட்லி" என்று பதிவிட்டுள்ளார். இந்த தொடரின் க்ளைமாக்ஸ் காட்சியானது வருகிற ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.