சின்னத்திரைக்கு வந்தார் வடிவேலு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சியான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் சாயலில் இன்னொரு சேனல் "டாப் குக்கு டூப் குக்கு" என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது. "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் நான்கு சீசன்களில் நடுவராக வந்த வெங்கடேஷ் பட், அந்நிகழ்ச்சியில் இருந்து விலகி இந்த நிகழ்ச்சிக்கு நடுவராகி இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம்தான் இந்த நிகழ்ச்சியையும் தயாரிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் உள்ள 9 போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு செப்பும் தலைவராக ஒதுக்கப்படுவர். இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு 20 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் குக்குகளாக பெப்சி விஜயன், சோனியா அகர்வால், சைத்ரா ரெட்டி, சிங்கம் புலி, ஐஸ்வர்யா தத்தா, நரேந்திர பிரசாத், சாய் தீனா, ஷாலி நிவாஸ், சுஜாதா சிவகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். டூப் குக்குகளாக ஜிபி முத்து, தீபா, தீனா, மோனிஷா, அதிர்ச்சி அருண், பரத், கதிர், சவுந்தர்யா, முகுந்த், விஜய் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க எபிசோட்களில் வடிவேலு கலந்து கொள்கிறார். இதற்கான புரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வடிவேலு இதற்கு முன்பும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்து பேசி இருக்கிறார். நேரடியாக கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்கிறார்கள்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.